பதிவு செய்த நாள்
29
ஜூலை
2015
05:07
1. த்வயி விஹரண லோலே பால ஜாலை: ப்ரலம்ப
ப்ரதமந ஸ விலம்பே தேநவ: ஸ்வைர சாரா:
த்ருண குதுக நிவிஷ்டா தூரதூரம் சரந்த்ய:
கிமபி விபிநம் ஐஷீக ஆக்யம் ஈஷாம் பபூவு:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ ப்ரலம்பாசுரனைக் கொன்றபோது, அதனை ஆயர் சிறுவர்கள் கண்டு மகிழ்வதற்காகச் சற்று தாமதம் செய்தாய். இதற்கிடையே உன்னுடைய பசுக்கள் தங்கள் விருப்பப்படி புல்லைத் தேடி சென்றன. இவ்விதமாகச் சென்றபோது அவை ஐஷீகம் என்ற காட்டை அடைந்தன.
2. அநதிகத நிதாக க்ரௌர்ய ப்ருந்தாவந அந்தாத்
பஹி: இதம் உபயாதா: காநநம் தேநவ: தா:
தவ விரஹ விஷண்ணா: ஊஷ்மல க்ரீஷ்ம தாப
ப்ரஸர விஸரத் அம்பஸி ஆகுலா: ஸ்தம்பம் ஆபு:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! வெயிலின் வெப்பம் என்றால் என்ன என்பதை ப்ருந்தாவனத்தில் இருந்தபோது அந்தப் பசுக்கள் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் இப்போது இந்த காட்டை அடைந்த காரணத்தாலும், வெயிலின் கொடுமையாலும். உன்னைப் பிரிந்த மன வருத்தத்தாலும் அவை தாகம் கொண்டவையாக செயலற்று நின்றன.
3. ததநு ஸஹ ஸஹாயை: தூரம் அந்விஷ்ய சௌரே
கலித ஸரணி முஞ்ஜ அரண்ய ஸஞ்ஜாத கேதம்
பசு குலம் அபிவீக்ஷ்ய க்ஷிப்ரம் ஆநேதும் ஆராத்
த்வயி கதவதி ஹீ ஹீ ஸர்வத: அக்நி: ஜஜ்ரும்பே
பொருள்: குருவாயூரப்பா! அப்போது நீ ஆயர் சிறுவர்களுடன் சேர்ந்து பசுக்களைத் தேடினாய் அல்லவா? சற்று நேரம் கழித்து முஞ்ஜிக் காட்டின் நடுவே அவை உள்ளதைக் கண்டாய். அவற்றை மீட்டு வர அவற்றின் அருகே சென்றபோது, நான்கு திசைகளிலும் நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது அல்லவா?
4. ஸகல ஹரிதி தீப்தே கோர பாங்கார பீமே
சிகிநி விஹத மார்க்கா: அர்த்த தக்தா இவ ஆர்த்தா:
அஹஹ புவந பந்தோ பாஹி பாஹி இதி ஸர்வே
சரணம் உபகதா: த்வாம் தாப ஹர்த்தாரம் ஏகம்
பொருள்; குருவாயூரப்பா! பெருத்த ஓசையுடன் அந்தத் தீயானது நான்கு திசைகளிலும் பரவி எரிந்தது. அதனால் ஆயர் சிறுவர்களின் பாதை தடைப்பட்டது. அனைவரும் உன்னை நோக்கி, க்ருஷ்ணா! உலகத்தின் பந்துவாக உள்ளவனே! காப்பாற்று! காப்பாற்று! என்று அனைத்துத் துன்பங்களையும் நீக்கும் உன்னிடம் சரணம் அடைந்தனர் அல்லவா?
5. அலம் அலம் அதி பீயா ஸர்வத: மீலயத்வம்
த்ருசம் இதி தவ வாசா மீலித அக்ஷேஷு தேஷு
க்வநு தவ தஹந: அஸௌ ருத்ர முஞ்ஜாடவீ ஸா
ஸபதி வவ்ருதிரே தே ஹந்த பாண்டீர தேசே
பொருள்: குருவாயூரப்பா! உடனே நீ அவர்களை நோக்கி, பயப்பட வேண்டாம். பயந்தது போதும். உங்கள் கண்களைச் சற்று மூடிக் கொள்ளுங்கள். என்றாய், உனது சொற்களைக் கேட்ட அவர்களும் தங்கள் கண்களை மூடிக் கொண்டனர். பின்னர் கண்களைத் திறந்தபோது - என்ன வியப்பு! காட்டுத்தீ எங்கே, அந்த காடு எங்கே - எதுவும் இல்லை, அவர்கள் பாண்டீர மரத்தின் அடியில் நின்றிருந்தனர்.
6. ஜயஜய தவ மாயா கா இயம் ஈச இதி தேஷாம்
நுதிபி: உதித ஹாஸ: பத்த நாநா விலாஸ:
புந: அபி விபிந அந்தே ப்ராசர: பாடல ஆதி
ப்ரஸவ நிகர மாத்ர க்ராஹ்ய கர்ம அநுபாவே
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஆயர் சிறுவர்கள் உன்னை நோக்கி, உனக்கு எப்போதும் வெற்றியே! என்னே உனது மாயை! ஈசனே என்று வணங்கினர். நீ அவர்கள் கூறியதைக் கேட்டு புன்னகையுடன் நின்றாய். அந்தக் காட்டில் பூத்திருந்த பாதிரி போன்ற மலர்களால் மட்டுமே அது கோடை காலம் என்று உணர முடிந்தது. (உனது மாயை மூலம் அந்த வெப்பத்தினை மறைத்தாய்) பின்னர் அவர்களுடன் அந்தக் காட்டில் மேலும் சுற்றித் திரிந்தாய்.
7. த்வயி விமுகம் இவ உச்சை: தாப பாரம் வஹந்தம்
தவ பஜந வத் அந்த: பங்கம் உச்சோஷயந்தம்
தவ புஜவத் உதஞ்சந் பூரி தேஜ: ப்ராவஹம்
தபஸ மயம் அநைஷீ: யாமுநேஷு ஸ்தலேஷு
பொருள்: குருவாயூரப்பா! நீ அந்த யமுனைக் கரையில் இருந்தபோது கோடைகாலம் எப்படி இருந்தது? உன்னிடம் பக்தி இல்லாதவர்களின் உள்ளத்தில் உண்டாகும் துன்பத்தின் வெப்பம் போன்றும். மனதில் உள்ள பாவம் என்றும் சேற்றைக் காயவைக்கும் தன்மை உடைய உனது ஸத்ஸங்கங்களின் வெப்பம் போன்றும், உன்னுடைய கைகளில் இருந்து வெளிப்படும் ஒளியைப் போன்றும் இருந்தது.
8. ததநு ஜலத ஜாலை: த்வத் வபு: துல்ய பாபி:
விகஸத் அமல வித்யுத பீத வாஸ: விலாஸை:
ஸகல புவந பாஜாம் ஹர்ஷதாம் வர்ஷ வேலாம்
க்ஷிதி த்ர குஹரேஷு ஸ்வைர வாஸீ வ்யநைஷீ:
பொருள்: குருவாயூரப்பா! ( அந்த கோடைக் காலத்தைத் தொடர்ந்து) பின்னர் உனது கரிய திருமேனி போன்று நிறத்தைக் கொண்டிருந்த மேகங்கள் காணப்பட்டன. அவை நீ உனது இடுப்பில் அணிந்துள்ள பொன்னாடை போன்று மின்னல்களைக் கொண்டிருந்தன. இவை ஒன்றுகூடி உலகினை மகிழ்விக்கும் மழைக் காலத்தை உண்டாக்கின. அப்போது நீ குகைகளில் அமர்ந்து மகிழ்ந்தாய்.
9. குஹர தல நிவிஷ்டம் த்வாம் கரிஷ்ட்டம் கிரி இந்த்ர:
சிகி குல நவ கேகா காகுபி: ஸ்தோத்ர காரீ
ஸ்புட குடஜ கதம்ப ஸ்தோம புஷ்ப அஞ்ஜலிம் ச
ப்ரவிததத் அநுபேஜே தேவ கோவர்த்தந: அஸௌ
பொருள்: குருவாயூரப்பா! மலைகளில் சிறந்து விளங்கிய கோவர்த்தனம் என்ற மலையின் குகைகளில் நீ தங்கிக் கழிந்தாய். அந்த நேரத்தில், மழையின் காரணமாக மகிழ்ந்த மயில்கள், பெருமை மிகுந்த உன்னை, தங்கள் கேகா என்னும் ஒலியால் துதித்தன. மேலும் மல்லிகை, கதம்பம் போன்றவற்றால் நீ வணங்கப்பட்டாய்.
10. அத சரதம் உபேதாம் தாம் பவத் பக்த சேத:
விமல ஸலில பூராம் மாநயந் காநநேஷு
த்ருணம் அமல வந அந்தே சாரு ஸஞ்சாரயந் கா:
பவந புர பதே த்வம் தேஹி மே தேஹ ஸௌக்யம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் உன் அடியார்களின் மனம் தெளிவாக உள்ளது போன்ற நீருடன் கூடிய சரத்காலம் வந்தது. அப்போது அந்தக் காட்டின் அழகை நன்றாக அனுபவித்துக் கொண்டும், பசுக்களைப் புதிதாக வளர்ந்த புற்களை மேயவைத்தும் கழித்தாய். இப்படியாக லீலைகள் பல செய்த நீ எனக்கு உடல் ஆரோக்கியத்தை அளிப்பாயாக.