பதிவு செய்த நாள்
29
ஜூலை
2015
05:07
ப்ராமணர்கள்
தத: ச ப்ருந்தாவனத: அதிதூரத:
வநம் கத: த்வம் கலு கோபகோ குலை:
ஹ்ருத் அந்தரே பக்ததர த்விஜ அங்கநா
கதம்பக அநுக்ரஹண ஆக்ரஹம் வஹந்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒரு சமயம் நீ உன்னிடம் மிகுதியான பக்தியும் அன்பும் கொண்டிருந்த ப்ராமணர்களின் மனைவிகளுக்கு அருள் புரிய வேண்டும் என்று விரும்பினாய். உடனே நீ ஆயர் சிறுவர்களுடனும், பசுக் கூட்டத்துடனும் ப்ருந்தா வனத்தை விட்டுக் கிளம்பி, வெகு தூரத்தில் இருந்த ஒரு காட்டிற்குச் சென்றாய் அல்லவா?
2. தத: நிரீக்ஷ்ய அசரணே வந அந்தரே
கிகோர லோகம் க்ஷுதிதம் த்ருஷா ஆகுலம்
அதூரத: யக்ஞ பராந் த்விஜாந் ப்ரதி
வ்யஸர்ஜய: தீதிவி யாசநாய தாந்
பொருள்: குருவாயூரப்பா! அந்தக் காட்டின் நடுவில் ஆயர் சிறுவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் பசியாலும் தாகம் கொண்டும் வாடினார்கள். அப்போது அங்கு யாகம் செய்து கொண்டிருந்த ப்ராமணர்களிடம் சென்று உணவு யாசிக்க நீ ஆயர் சிறுவர்களை அனுப்பினாய்.
3. கதேஷு அதோ தேஷு அபிதாய தே அபிதாம்
குமாரதேஷு ஓதந யாசிஷு ப்ரபோ
ச்ருதி ஸ்திரா: அபி அபிநிந்யு: அச்ருதிம்
ந கிஞ்சித் ஊசு: ச மஹீஸுர உத்தமா:
பொருள்: ப்ரபுவே! குருவாயூரப்பா! அந்தச் சிறுவர்கள் அந்தப் ப்ராமணர்களிடம் சென்று உன்னுடைய பெயர்களைக் கூறிக்கொண்டே உணவு யாசித்தனர். அப்போது வேத ஞானம் உள்ள ப்ராமணர்கள், அந்தச் சிறுவர்கள் அழைப்பது தங்கள் காதுகளில் விழுந்தும்கூட, கேட்காதது போல் எதுவும் கூறாமல் இருந்தனர்.
4. அநாதராத் கிந்ந திய: ஹி பாலகா:
ஸமாயயு: யுக்தம் இதம் ஹி யஜ்வஸு
சிராத் அபக்தா: கலு தே மஹீ ஸுரா:
கதம் ஹி பக்தம் த்வயி தை: ஸமர்ப்யதே
பொருள்: குருவாயூரப்பா! தங்களை அந்தப் ப்ராமணர்கள் கவனியாமல் இருந்ததால் ஆயர் சிறுவர்கள் மிகவும் வருந்தியபடி உன்னிடம் வந்தனர். யாகத்தை மட்டுமே செய்பவர்கள் இது போன்று செய்வது இயல்பே. அந்தப் ப்ராமணர்கள் வெகு காலம் உன்னிடம் பக்தி என்பதே இல்லாமல் இருந்தனர். அப்படிப்பட்டவர்களிடம் உணவை எதிர்பார்ப்பது எவ்வாறு பொருந்தும்?
5. நிவேதயத்வம் க்ருஹிணீ ஜநாய மாம்
திசேயு: அந்நம் கருணாகுலா இமா:
இதி ஸ்மித ஆர்த்ரம் பவதேரிதா கதா: தே
தாரகா: தார ஜநம் யயாசிரே
பொருள்: குருவாயூரப்பா! அந்தச் சிறுவர்களிடம், நீங்கள் அனைவரும் அந்தப் ப்ராமணர்களின் மனைவிகளிடம் சென்று, நான் வந்துள்ளதையும், நான் உணவு கேட்டதாகவும் கூறுங்கள். அவர்கள் கருணை உள்ளவர்கள். எனவே கண்டிப்பாக உணவு தருவார்கள். என்று புன்னகையுடன் கூறினாய். அவர்களும் ப்ராமணர்களுடைய மனைவிகளிடம் சென்று யாசித்தனர்.
6. க்ருஹீத நாம்நி த்வயி ஸம்ப்ரம் ஆகுலா:
சதுர்விதம் போஜ்ய ரஸம் ப்ரக்ருஹ்ய தா:
சிரம் த்ருத த்வத் பரவிலோகந ஆக்ரஹா:
ஸ்வகை நிருத்தா அபி தூர்ணம் ஆயயு:
பொருள்: குருவாயூரப்பா! உன்னைக் காண்பதற்காக வெகு நாட்களாக அவர்களது மனைவிகள் எண்ணம் கொண்டிருந்தனர். இப்போது உனது பெயரையும் நீ வந்துள்ளதாக அறிந்ததையும் கேள்விப்பட்ட அவர்கள் மகிழ்ந்து பரபரப்பு அடைந்தனர். தங்கள் கணவன்மார்கள் தடுத்தபோதிலும், நான்கு வகையான உணவுகளை எடுத்துக் கொண்டு, உன்னிடம் விரைவாக வந்தனர் (நான்கு வகை உணவு: காத்யம் - கடித்து உண்பது: ஸோஷ்யம் - நாக்கில் உண்பது: லேஹியம் - வெண்ணெய் போன்றது; பேயம்- குடிப்பது).
7. விலோல பிஞ்ச்சம் சிகுரே கபோலயோ:
ஸமுல்லஸத் குண்டலம் ஆர்த்ரம் ஈக்ஷிதே
நிதாய பாஹும் ஸுஹ்ருத் அமஸ ஸீமநி
ஸ்திதம் பவந்தம் ஸமலோக யந்த தா:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னை அவர்கள் எப்படி பார்த்தனர்? தலையில் அழகான கொண்டையில் மயில் பீலி அசைந்து ஆடியது; இரண்டு காதுகளில் அணிந்திருந்த குண்டலங்கள் கன்னத்தில் இடித்து ஒளி வீசியது; உனது பார்வை மிகவும் கனிவாக இருந்தது; உனது ஒரு கையை உன் நண்பனின் தோள் மீது வைத்திருந்தாய். இப்படியாக மிகுந்த அழகுடன் உன்னைக் கண்டனர் அல்லவா?
8. ததா ச காசித் த்வத் உபாகம உத்யதா
க்ருஹீத ஹஸ்தா தயிதேந யஜ்வநா
ததா ஏவ ஸஞ்சிந்த்ய பவந்தம் அஞ்ஜஸா
விவேச கைவல்யம் அஹோ க்ருதிந் அஸௌ
பொருள்: குருவாயூரப்பா! அந்த நேரத்தில் ஒரு பெண் உன்னிடம் வர முயன்றாள். அப்போது அவள் கணவன் (ஒரு ப்ராமணன்) அவள் கையைப் பிடித்துத் தடுத்தான். உடனே அவள் உன்னைக் குறித்துத் த்யானித்தாள். அந்த நொடியில் அவள் உன்னிடம் கலந்து விட்டாள். (மோட்சம் பெற்றாள்) அல்லவா? என்ன புண்ணியம் செய்தவள்?
9. ஆதாய போஜ்யாநி அநுக்ருஹ்ய தா: புந:
த்வத் அங்க ஸங்க ஸ்ப்ருஹயா உஜ்ஜதீ: க்ருஹம்
விலோக்ய யக்ஞாய விஸர்ஜயந் இமா:
சகர்த்த பர்த்ரூந் அபி தாஸு அகர்ஹணான்
பொருள்: குருவாயூரப்பா! அவர்கள் அளித்த உணவை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு அருள் செய்தாய். அவர்கள் உனது திருமேனியின் மீது விருப்பம் கொண்டனர். அதனால் தங்கள் வீடுகளைத் துறந்து வந்தனர். ஆயினும் நீ அவர்களைத் திருப்பி அனுப்பினாய். அவர்கள் கணவன்மார்கள் அந்தப் பெண்களிடம் எந்தக் குற்றமும் காணாது இருக்கும்படி அருளினாய்.
10. நிரூப்ய தோஷம் நிஜம் அங்கநா ஜநே
விலோக்ய பக்திம் ச புந: விசாரிபி:
ப்ரபுத்த தத்வை: த்வம் அபிஷ்டுத: த்விஜை:
மருத்புர: அதீசு நிருந்தி மே கதாந்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்ப்ராமணர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்தனர். மேலும் தங்கள் மனைவிமார்கள் உன்னிடம் கொண்டிருந்த பக்தியையும் உணர்ந்தனர். உன்னைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு, தத்துவம் என்று உன்னை வணங்கினர். இப்படிப்பட்ட பெருமைகள் கொண்ட நீ எனது பிணிகளைத் தடுக்க வேண்டும்.