ஞான ஈஸ்வரர் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு பூச நட்சத்திர பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2025 12:10
கோவை; புரட்டாசி பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் சந்தன காப்பு மற்றும் காவி உடை அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் குரு பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார் . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.