வடலூர் சத்திய ஞான சபையில் பூசம் நட்சத்திர ஜோதி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2025 11:10
வடலூர்; வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், மாதந்தோறும் பூசம் நட்சத்திர தினத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. நேற்று மாத பூசம் தினத்தை முன்னிட்டு, இரவு 7:45 மணி முதல் 8:30 மணி வரை, 6 திரைகள் விலக்கப்பட்டு, மூன்று முறை ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, மந்தாரக்குப்பம் சுற்று பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் ஜோதி தரிசனம் கண்டனர். வார நாள் மற்றும், தீபாவளியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைந்தே காணப்பட்டது. சன்மார்க்க அன்பர்கள் சார்பில் ஜோதி தரிசனம் காண வந்தவர்களுக்கு வழக்கம்போல அன்னதானம் ஆங்காங்கே வழங்கப்பட்டது.