கோகர்ணாவில் விதுஷேகர பாரதி மஹாஸ்வாமி; மகா கணபதி, மஹாபலேஷ்வர சுவாமிக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2025 12:10
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி மகாஸ்வாமி தலைமையில் சாஸ்திர சபை இன்று நடைபெற்றது. முன்னதாக ஜகத்குரு சங்கராச்சார்யா ஸ்ரீ ஸ்ரீ விதுஷேகர பாரதி மஹாஸ்வாமி அக்டோபர் 13 ஆம் தேதி கோகர்ணாவின் புனித க்ஷேத்திரத்தை வந்தடைந்தார். மறுநாள் 14 ம் தேதி, சமுத்திர பூஜையில் சமுத்திர பூஜையைத் தொடர்ந்து, ஸ்ரீ மகா கணபதி மற்றும் ஸ்ரீ மஹாபலேஷ்வர ஸ்வாமிக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டார். இன்று மகாஸ்வாமி தலைமையில் சாஸ்திர சபை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆசி பெற்றனர்.