பதிவு செய்த நாள்
29
ஜூலை
2015
05:07
1. தத்ருசிரே கில தத் க்ஷணம் அக்ஷத
ஸ்த நித ஜ்ரும்பித கம்பித திக்படா:
ஸுஷமயா பவத் அங்க துலாம் கதா:
வ்ரஜ பத உபரி வாரி தரா: த்வயா
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்போது ப்ருந்தாவனத்தின் மீது மேகங்களில் இடைவிடாமல் இடி முழக்கங்கள் கேட்கத் தொடங்கின. அந்த இடியின் ஓசையைக் கேட்டு அனைத்துத் திசைகளும் நடுங்கின. உன்னுடைய அழகான திருமேனியின் நிறத்திற்கு ஒப்பான நிறம் கொண்ட மேகங்கள் பரவலாகச் சூழ்ந்தன. அவற்றை க் கண்டு நீ பெரிதும் மகிழ்ந்தாய் அல்லவா?
2. விபுல கரக மிச்ரை: தோய தாரா நிபாதை:
திசி திசி பசுபாநாம் மண்டலே தண்ட்யமாநே
குபித ஹரி க்ருதாந் ந: பாஹி பாஹி இதி தேஷாம்
வசநம் அஜித ச்ருண்வந் மா பபீத இதி அபாணீ.
பொருள்: யாராலும் வெற்றி கொள்ள இயலாதவனே! ஹரியே! குருவாயூரப்பா! அப்போது மிகப் பெரிய ஆலங்கட்டிகளுடன் ப்ருந்தாவனத்தில் மழை தாரை தாரையாகக் கொட்டியது. இதனால் அங்கு நிறைந்திருந்த ஆயர்கள் துன்பம் உற்றனர். உன்னிடம், ஹரியே! கோபம் கொண்ட இந்திரனிடம் இருந்து எங்களைக் காப்பாற்று என்று வேண்டினர். உடனே நீ அவர்களிடம் பயப்பட வேண்டாம்! என்று ஆறுதலாகக் கூறினாய்.
3. குல இஹ கலு கோத்ர: தைவதம் கோத்ர சத்ரோ:
விஹிதம் இஹ ஸ: ருந்த்யாத் க: நு வ: ஸம்சய: அஸ்மிந்
இதி ஸ ஹஸித வாதீ தேவ கோவர்த்தந அத்ரிம்
த்வரிதம் உதமுமூல: மூலத: பாலதோர்ப்யாம்
பொருள்: தேவனே! குருவாயூரப்பா நீ ஆயர்களிடம், நமது யாதவ குலத்திற்கு இந்த கோவர்த்தன மலைதான் தெய்வமாகும். அது நம்மை நம்முடைய எதிரியான இந்த்ரனிடமிருந்து நிச்சயம் காப்பாற்றும். இதில் உங்களுக்கு ஏன் சந்தேகம்? என்று கேட்டாய். இப்படிக் கூறிக்கொண்டே உனது சிறிய அழகிய கைகளால் அந்த கோவர்த்தன மலையை அடியோடு பிடுங்கி தூக்கினாய் அல்லவா?
4. ததநு கிரி வரஸ்ய ப்ரோத்ருதஸ்ய அஸ்ய தாவத்
ஸிகதில ம்ருது தேசே தூரத: வாரிதாபே
பரிகர பரிமிச்ராந் தேநு கோபாந் அதஸ்தாத்
உபநிததத் அதத்தா ஹஸ்த பத்மேந சைலம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அந்த கோவர்த்தன மலையை உயரத்தில் தூக்கியபோது, அதன் கீழ் உள்ள தரைப்பகுதியானது மிகுந்த மணல் கொண்டு மிருதுவாக இருந்தது. அதன் கீழ் நீர் வராமல் வெகு தூரத்தில் நின்று விட்டது. அதன் கீழ் யாதவ மக்கள் அனைவரையும் அவர்கள் வீட்டுப் பொருட்களுடனும், பசுக்களுடனும் நிற்கும்படி கூறினாய். உனது சிறிய தாமரை போன்ற கைகளால் அந்த மலையை (குடை போன்று) பிடித்துக் கொண்டாய்.
5. பவதி வித்ருத சைலே பாலிகாபி: வயஸ்யை:
அபி விஹித விலாஸம் கேலி லாப ஆதி லோலே
ஸவித மிலித தேநூ: ஏக ஹஸ்தேந கண்டூ
யதி ஸதி பசு பாலா: தோஷம் ஐக்ஷந்த ஸர்வே
பொருள்: குருவாயூரப்பா! நீ உனது ஒரு கையில் அந்த மலையை வைத்திருந்தாய். அருகில் நின்றிருந்த கோபிகைகளுடனும், உனது நண்பர்களுடனும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாய். உனது மற்றொரு கையால் அருகில் நின்று கொண்டிருந்த பசுக்களை தடவிக் கொண்டிருந்தாய். இதனைக் கண்ட ஆயர்கள் வியப்புடன் மகிழ்ந்தனர்.
6. அதி மஹாந் கிரி: ஏஷ து வாமகே
கர ஸரோருஹி தம் தரதே சிரம்
கிம் இதம் அத்புதம் அத்ரி பலம் நு இதி
த்வத் அவலோகிபி: ஆகதி கோபகை:
பொருள்: குருவாயூரப்பா! உன்னைக் கண்ட ஆயர்கள். இந்த மலை இவ்வளவு பெரியதாக உள்ளது. நமது க்ருஷ்ணனோ மிகவும் குழந்தை ஆயிற்றே! அவன் தனது தாமரை போன்ற மென்மையான இடது கையினால் அதனை இத்தனை நேரம் தாங்கி நிற்கிறானே! அந்த மலை அதன் பலத்தை இவனுக்கு அளிக்கிறதோ? என்று அறியாமையால் கூறினார்கள் அல்லவா?
7. அஹஹ தார்ஷ்ட்யம் அமுஷ்ய வடேர கிரிம்
வ்யதித பாஹு: அஸௌ அவரோபயேத்
இதி ஹரி: த்வயி பக்த விகர்ஹண:
திவஸ ஸப்தகம் உக்ரம் அவர்ஷயத்
பொருள்: ஹரியே! குருவாயூரப்பா! நீ இப்படி நிற்பதைக் கண்ட இந்திரன் மிகவும் கோபத்துடன். இந்தச் சிறுவனுக்கு உள்ள துணிவுதான் என்னே என்ன கர்வம்? தனது கைகள் சோர்ந்து போனவுடன் அந்த மலையை கீழே இறக்கி விடுவான். என்று எண்ணினான். அத்துடன், மழையை மேலும் அதிகரித்து தொடர்ந்து ஏழு நாட்கள் பெய்யும்படி செய்தான்.
8. அசலதி த்வய தேவ பதாத் பதம்
கலித ஸர்வ ஜலே ச கந உத்ககேர
அபஹ்ருதே மருதா மருதாம் பதி:
த்வத் அபி சங்கித தீ: ஸமுபாத்ரவத்
பொருள்: தேவனே! குருவாயூரப்பா! நீ எங்கு நின்றாயோ அந்த இடத்தில் இருந்து சிறிதும் நகரவில்லை. மழையைக் கொட்டிய மேகங்கள் நீர் தீர்ந்து விட்ட நிலையில், காற்றின் மூலம் தள்ளிச் செல்லப்பட்டன. தேவர்களின் தலைவனான இந்திரன் உன்னைக் கண்டு பயந்தான். அங்கிருந்து மறைந்து ஓடிவிட்டான்.
9. சமம் உபேயுஷி வர்ஷ பரே ததா
பசுப தேநு குலே ச விநிர்கதே
புவி விபோ ஸமுபாஹித பூதர:
ப்ரமுதிதை: பசுபை: பரிரே பிஷே
பொருள்: குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! அந்த அடைமழை ஓய்ந்தது. ஆயர்களும் பசுக்களும் அந்த மலைக் குடையை விட்டு, வெளியில் வந்தனர். நீயும் அந்த மலையை அதன் இடத்தில் மெதுவாக இறக்கி வைத்தாய். கோபர்கள் அனைவரும் மிகுந்த ஆனந்தத்துடன் உன்னைக் கட்டி அணைத்தனர். அல்லவா?
10. தரணிம் ஏவ புரா த்ருதவாந் அஸி
க்ஷிதி தர உத்தரணே தவ க: ச்ரம:
இதி நுத: த்ரிதசை: கமலா பதே
குரு புர ஆலய பாலய மாம் கதாத்
பொருள்: தாமரையாளின் பதியே! குருவாயூர் கோயிலில் உள்ளவனே! ஸ்ரீஅப்பனே! க்ருஷ்ணா! உன்னிடம் வந்த தேவர்கள். நீ முன்பு (வராக அவதாரம்) இந்த பூமியையே தூக்கி நின்றவன்; அப்படிப்பட்ட உனக்கு இந்த மலையை உயர்த்தியதில் என்ன சிரமம் ஏற்படக்கூடும்? என்று வியந்து துதித்தனர். இப்படிப்பட்ட நீ எனது நோய்களில் இருந்து என்னைக் காக்க வேண்டும்.