ஆர்.எஸ்.மங்கலம்: அரசாளவந்த அம்மன் ஆலய 39 வது ஆண்டு பால்குட விழா கடந்த ஜூலை 20 ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபி ஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பால்குட விழா பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது. அங்கு அரசாள அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.