ஆர்.கே.பேட்டை:ஆடி மாத செவ்வாய்க்கிழமையை ஒட்டி,பொன்னியம்மனுக்கு குத்துவிளக்கு பூஜை நடந்தது.ஆர்.கே.பேட்டை அடுத்த, அஸ்வரேவந்தாபுரம் திருகாவேரி குளக்கரையில் உள்ளது பொன்னியம்மன் கோவில். இந்த கோவிலில், ஆடி மாதத்தை ஒட்டி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், உற்சவர் அம்மன் முன்பாக, பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். பின், உற்சவர் உள் புறப்பாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.