திருக்கனுார்: கூனிச்சம்பட்டு, காமாட்சி சமேத பூதநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.பிரதோஷத்தையொட்டி, மாலை 6:30 மணிக்கு, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளும், இரவு 7:30 மணிக்கு, பூதநாதீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையும் நடந்தது. பின், சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ராமசுப்ரமணியன் குருக்கள் செய்திருந்தார்.