பதிவு செய்த நாள்
01
ஆக
2015
12:08
கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம், முத்துமாரியம்மன் கோவிலில், இன்று தீமிதி விழாவும், வரும், ஆக., 2ம் தேதி கூழ் படைத்தலும் நடக்க உள்ளன. கீழ்ப்பாக்கம், கே.வி.என்.புரத்தில், முத்துமாரியம்மன் பாளையத்தம்மன், சக்தி விநாயகர் கோவில் உள்ளது. அங்கு, கடந்த, 20ம் தேதி முதல் ஆடிப் பெருவிழா நடந்து வருகிறது. இன்று, காலை, 6 மணி முதல் அபிஷேகம், வீதியுலா நடக்கின்றன. மாலை 6:00 மணிக்கு தீ மிதி விழா நடக்கிறது. வரும், ஆக.,2ம் தேதி முற்பகல் 11:00 மணிக்கு அம்மனுக்கு கூழ் படைத்தல், இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள், சுந்தர்ராஜ், ஏழுமலை, சண்முகவேல் உள்ளிட்டோர் செய்துஉள்ளனர்.