ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் அருகே உள்ள காவனூர் ஒத்தக்கடை ஈஸ்வரன்கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கோயிலில் கிடாய் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டு மக்கள் செய்திருந்தனர்.