முகுந்த பட்டர், பத்மவல்லி என்ற பெருமாள் பக்தர்கள், ஸ்ரீவில்லிபுத்துõர் இறைவனான வடபத்ரசாயியிடம் பக்தி கொண்டவர்களாக இருந்தனர். அவர்களுக்கு கருடாழ்வாரின் அம்சமாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இவருக்கு விஷ்ணு சித்தர் என்று பெயரிட்டனர். இவரும் பெருமாள் மீது தீராத பக்தி கொண்டிருந்தார். இவரது வளர்ப்பு மகளே ஆண்டாள். இவ்வகையில் முகுந்தபட்டர், பத்மவல்லி இருவரும் ஆண்டாளின் தாத்தா, பாட்டியாகின்றனர்.