பதிவு செய்த நாள்
18
ஜூலை
2011
11:07
ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி கோயில்களில் ஆடி மாத சிறப்பு பூஜை நேற்று நடந்தது.ஆடி மாதத்தில் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் அம்மன் வழிபாடும், ஆடி கிருத்திக்கையில் முருக வழிபாடும் மிகவும் உகந்ததாகும். நேற்று ஆடி மாத பிறப்பு நாள் என்பதால் ஆழ்வார்குறிச்சி வரம்தரும் விநாயகர் கோயில், வேங்கடேச பெருமாள் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், சுடலைமாடசாமி கோயில், சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயில், கடையம் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயில், கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயில், கடையம் முப்புடாதியம்மன் கோயில், ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர் ஆவுடையம்பாள் கோயில், வன்னியப்பர் சிவகாமியம்பாள் கோயில் உட்பட சுற்று வட்டார கோயில்களில் ஆடி மாதம் சிறப்பு பூஜைகள் துவங்கின.நேற்று விடுமுறை தினம் என்பதாலும், மாதப்பிறப்பு என்பதாலும் சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் அதிக கூட்டம் காணப்பட்டது.