புளியங்குடி கோயிலில் 22ம் தேதி ஆடி கார்த்திகை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2011 11:07
புளியங்குடி : புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கார்த்திகை திருவிழா வரும் 22ம் தேதி துவங்குகிறது.புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 59வது ஆடிக் கார்த்திகை விழா காந்தி பஜாரில் உள்ள அலங்கார பந்தலில் வரும் 22ம் தேதி துவங்கி 4 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் இரவு 7 மணிக்கு மங்கள இசையுடன் விழா துவங்குகிறது. இரண்டாம் நாள் இரவு பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. மூன்றாம் நாள் இரவு பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது.நான்காம் நாள் காலையில் பால்குடம் மற்றும் சுவாமி அழைப்பு, தொடர்ந்து கும்பஜெபம், மூலவருக்கு பாலாபிஷேகம், சோடசோப தீபாராதனை, மதியம் 1.05 மணிக்கு உற்சவ மூர்த்தியை மண்டகபடிக்கு அழைத்து வருதல், கும்பஜெபம் மற்றும் ஹோமம், மாலை அபிஷேகம், இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் சுவாமி வீதியுலா ஆகியன நடக்கிறது.ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.