பதிவு செய்த நாள்
17
ஆக
2015 
11:08
 
 மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், ஆடிப்பூர உற்சவம், நேற்று விமரிசையாக நடந்தது.ஆடிப்பூரம், ஆண்டாள் அவதார நாளை முன்னிட்டு, ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு, ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடந்தது. காலை, 10:30 மணிக்கு, ஸ்தலசயன பெருமாள்; நிலமங்கை தாயார்; ராமானுஜர்; பெரியாழ்வார் உட்பட உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. சுவாமிக்கு புதிய முத்தங்கி அணிவித்து, 108 மண் குடுவைகளில் நிரப்பிய அக்கார வடிசலை, பகல், 12:00 மணிக்கு நைவேத்யம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சுவாமி; ஆண்டாள்; ஸ்ரீதேவி; பூதேவி ஆகியோர், வீதியுலா சென்றனர்.