பதிவு செய்த நாள்
17
ஆக
2015
11:08
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், கோனேரிகுப்பம் பகுதியில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவில் ஆடித் திருவிழாவில், நேற்று, பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது.காஞ்சிபுரம் அடுத்த, கோனேரிகுப்பம் பகுதியில் கனக துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இக் கோவில், இந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோவில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, கடந்த வாரம், கோவிலில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து, நேற்று ஆடிபூரத்தை முன்னிட்டு, காலை 9:00 மணியளவில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் இருந்து, 108 பால்குடம் எடுத்து பெண்கள் கம்மாள தெரு, அப்பா ராவ் தெரு வழியாக ஊர்வலமாக சென்றனர். 11:00 மணியளவில், கனக துர்க்கையம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து தீபாராதனை நடந்தது.