Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » பலராமனின் கல்யாணம்
பலராமனின் கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2015
02:08

1. த்ரிதச வர்த்தகி வர்த்தித கௌசலம்
த்ரிதச தத்த ஸமஸ்த விபூதிமத்
ஜலதி மத்த்ய கதம் த்வம் அபூஷய:
நவபுரம் வபு: அஞ்சித ரோசிஷா

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தப் புதிய நகரம் கடலின் நடுவில் அமைந்தது ஆகும். அதனை தேவலோகச் சிற்பியான விச்வகர்மன் உருவாக்கினான். தேவர்கள் வழங்கிய செல்வத்திரள் அங்கு இருந்தன. அத்தகைய துவாரகை நகரத்தை நீ உனது திருமேனியின் அழகால் மேலும் அழகுபடுத்தினாய்.

2. ததுஷி ரேவத பூப்ருதி ரேவதீம்
ஹல ப்ருதே தநயாம் விதி சாஸநாத்
மஹிதம் உத்ஸவ கோஷம் அபூபுஷ:
ஸமுதிதை: முதிதை: ஸஹ யாதவை:

பொருள்: குருவாயூரப்பா! ப்ரும்மா தனக்கு இட்ட கட்டளையின்படி ரேவதன் என்ற அரசன் தனது மகளான ரேவதியைப் பலராமனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அப்போது நீயும் யாதவர்களும் ஒன்றாக கூடி நின்று அந்த கல்யாணத்தை உத்ஸவமாகவே கொண்டாடினீர்கள் அல்லவா?

3. அத விதர்ப்ப ஸுதாம் கலு ருக்மிணீம்
ப்ரணயீம் த்வயி தேவ ஸஹோதர:
ஸ்வயம் அதித்ஸத சேதி மஹீபுஜே
ஸ்வ தமஸா தம் அஸாதும் உபாச்ரயந்

பொருள்: குருவாயூரப்பா! விதர்ப்ப தேசத்தின் அரசன் மகளான ருக்மிணி என்பவள் உன் மீது மிகுந்த காதல் கொண்டிருந்தாள். அவளுடைய சகோதரனான ருக்மி என்பவன் தனது தீய குணங்களால், மிகவும் துஷ்டனான சேதி நாட்டு மன்னன் சிசுபாலனிடம் நட்பு கொண்டிருந்தான். சிசுபாலனுக்கு ருக்மிணியைத் திருமணம் செய்யவும் விருப்பம் கொண்டாள்.

4. சிர த்ருத ப்ரணயா த்வயி பாலிகா
ஸபதி காங்க்ஷித பங்க ஸமாகுலா
தவ நிவேதயிதும் த்விஜம் ஆதிசத்
ஸ்வ கதநம் கதநங்க விநிர்மிதம்

பொருள்: குருவாயூரப்பா! அந்தப் பெண் உன் மீது பல நாட்களாகக் காதல் கொண்டிருந்தாள். தனது காதலுக்கு (அண்ணன் மூலம்) தடை உண்டாவதைக் கண்டு மனம் வருந்தினாள். கருணை என்பதே இல்லாத, காமன் தனக்கு உண்டாக்கிய துன்பத்தை உனக்குத் தெரிவிக்க விருப்பம் கொண்டாள். எனவே ஓர் அந்தணனை உன்னிடம் தூதுவனாக அனுப்பினாள்.

5. த்விஜ ஸுத: அபி ச தூர்ணம் உபாயயௌ
தவ புரம் ஹி துராச துராஸதம்
முதல் அவாப ச ஸாதர பூஜித:
ஸ பவதா பவ தாப ஹ்ருதா ஸ்வயம்

பொருள்: குருவாயூரப்பா ! தீய எண்ணம் உடையவர்களால் நெருங்க முடியாத உனது நகரத்திற்குள் அந்தப் ப்ராமணன் வந்து சேர்ந்தான் பிறவிப் பயன் காரணமாக உண்டாகும் துன்பங்களை நீக்கும் நீ, அவனை மிகழ்வுடன் வரவேற்றாய் அல்லவா?

6. ஸ ச பவந்தம் அவோசத குண்டிநே
ந்ருப ஸுதா கலு ராஜதி ருக்மிணீ
த்வயி ஸமுத்ஸுகயா நிஜ தீரதா
ரஹிதயா ஹி தயா ப்ரஹித: அஸ்மி அஹம்

பொருள்: குருவாயூரப்பா! அந்தப் ப்ராமணன் உன்னிடம் குண்டினபுரம் என்ற நாட்டில் அழகான இளவரசியாக ருக்மிணி என்பவள் உள்ளாள் அல்லவா? அந்தப் பெண் உன் மீது காதல் கொண்டுள்ளாள். உன்னிடம் வெளிப்படுத்த துணிவு இல்லாத காரணத்தால், என்னைத் தூதுவனாக இப்போது அனுப்பினாள் என்றான்.

7. தவ ஹ்ருதா அஸ்மி புரா ஏவ குணை: அஹம்
ஹரதி மாம் கில சேதி ந்ருப: அதுநா
அயி க்ருபா ஆலய பாலய மாம் இதி
ப்ரஜகதே ஜகத் ஏக பதே தயா

பொருள்: குருவாயூரப்பா! அந்த அந்தணன் உன்னிடம் மேலும் அவள் உன்னிடம் இவ்வாறு கூறச்சொன்னாள் - கருணாமூர்த்தியே! க்ருஷ்ணா உலகின் நாதனே! உன்னைப் பற்றிய விவரங்களையும் உனது திருக்கல்யாண குணங்களையும் நான் கேள்விப் பட்டேன். அதனால் வெகுவாகக் கவரப்பட்டேன். ஆனால் இப்போதோ என்னை சிசுபாலன் மணந்து கொள்ளப் போகிறான். என்னை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினானாமே!

8. அசரணாம் யதி மாம் த்வம் உபேக்ஷஸே
ஸபதி ஜீவிதம் ஏவ ஜஹாமி அஹம்
இதி கிரா ஸுதநோ: அதநோத் ப்ருசம்
ஸுஹ்ருதயம் ஹ்ருதயம் தவ காதரம்

பொருள்: குருவாயூரப்பா! அவன் மேலும் உன்னிடம் (ருக்மிணி கூறியதாக) நான் இப்போது என்னைக் காப்பாற்ற யாரும் இல்லாமல் உள்ளேன். நீ என்னை கைவிட்டால் எனது உயிரை மாய்த்துக் கொள்ளவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினான். இதனைக் கேட்டு உனது மனம் துன்பம் கொண்டதாமே!

9. அகதய: த்வம் அத ஏந அயே ஸகே
தத் அதிகா மம மந்மத வேதநா
ந்ருப ஸமக்ஷம் உபேத்ய ஹராமி அஹம்
தத் அயி தாம் தயிதாம் அஸித ஈக்ஷணாம்

பொருள்: குருவாயூரப்பா! நீ அவனிடம் நண்பனே! என்னுடைய காதல் வேதனை ருக்மிணியை விட அதிகமாக உள்ளது. நான் கூடிய விரைவில் அங்கு வந்து, அத்தனை அரசர்கள் முன்னிலையிலும், அந்தக் கறுத்த விழி படைத்த பெண்ணைக் கைப்பிடிப்பேன், என்றாய் அல்லவா?

10 ப்ரமுதிதேந ச தேந ஸமம் ததா
ரத கத: லகு குண்டிநம் ஏயிவாந்
குரு மருத் புர நாயக மே பவாந்
விதநுதாம் தநுதாம் நிகில ஆபதாம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தப் ப்ராமணன் மிகவும் மகிழ்ந்தான். நீ அவனுடன் தேரில் ஏறிக்கொண்டு குண்டினபுரம் சென்றாய். இப்படிப்பட்ட நீ, என்னை எனது தடைகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar