Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » பாணாசுர யுத்தம், நிருகன் மோட்சம்
பாணாசுர யுத்தம், நிருகன் மோட்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2015
14:31

1. ப்ரத்யும்ந: ரௌக்மிணேய: ஸ கலு தவ
கலா சம்பரேண ஆஹ்ருத: தம்
ஹத்வா ரத்யா ஸஹ ஆப்த: நிஜ புரம்
அஹாத் ருக்மி கந்யாம் ச தந்யாம்
தத் புத்ர: அத அநிருத்த: குண நிதி:
அவஹத் ரோசநாம் ருக்மி பௌத்ரீம்
தத்ர உத்வாஹே கத: த்வம் நியவதி
முஸலிநா ருக்மீ அலி த்யூத வைராத்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது அம்சமாகவே ருக்மணிக்கு ப்ரத்யும்னன் பிறந்தான். அவன் சம்பாசுரனால் கவர்ந்து கொல்லப்பட்டான். ஆனால் அவனோ சம்பாசுரனைக் கொன்று ரதிதேவியுடன் துவாரகை வந்தான். பின்னர் மிகுந்த புண்ணியம் செய்தவளும் ருக்மியின் மகளும் ஆகிய ருக்மவதியை மணந்தான். (ருக்மவதி அவன் மாமன் மகள்). ப்ரத்யும்னனுக்கு மிகச்சிறந்த மகனாக அநிருத்தன் பிறந்தான். அவன் ருக்மணியின் பேத்தியான (ருக்மணியின் பிள்ளையின் பெண்) ரோசனையை மணந்தான். அநிருத்தனின் கல்யாணத்திற்கு நீ சென்றாயாமே! அங்கு சூதாட்டத்தில் எழுந்த சண்டையில் பலராமன் ருக்மியைக் கொன்றான் அல்லவா?

2. பாணஸ்ய ஸா பலி ஸுதஸ்ய ஸஹஸ்ர பாஹோ:
மாஹேச்வரஸ்ய மஹிதா துஹிதா கில உஷா
த்வத் பௌத்ரம் ஏநம் அநிருத்தம் அத்ருஷ்ட பூர்வம்
ஸ்வப்நே அநுபூய பகவந் விரஹ ஆதுரா அபூத்

பொருள்: பகவானே! குருவாயூரப்பா! பாணாசுரன் என்பவன் மஹாபலியின் பேரனும் சிறந்த சிவ பக்தனும், ஆயிரம் கைகளை உடையவனும் ஆவான். அவனுக்கு உஷா என்ற பெண் இருந்தாள். அவள் உனது பேரனான அநிருத்தனை நேரில் காணாமலே, கனவில் மட்டும் கண்டு, அவன் நினைவில் வாடித் தவித்தாளாமே!

3. யோகிநீ அதீவ குசலா கலு சித்ரலேகா
தஸ்யா: ஸகீ விலிகதீ தருணாந் அசேஷாந்
தத்ர அநிருத்தம் உஷயா விதிதம் நிசாயாம்
ஆநேஷ்ட யோக பலத: பவத: நிகேதாத்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த உஷாவிற்கு சித்ரலேகா என்ற தோழி இருந்தாள். அவள் யோக சக்தியையும் நுட்பமான திறமைகளையும் கொண்டிருந்தாள். பல இளைஞர்களின் படங்களை வரைந்து உஷாவிற்குக் காண்பித்தாள். அப்படி வரையும்போது அவள் வரைந்திருந்த அநிருத்தனைக் கண்ட உஷா, சித்ரலேகாவிடம் விவரத்தைக் கூறினாள். உடனே சித்ரலேகா தனது யோகத்தின் மூலம் உனது மாளிகையில் இருந்த அநிருத்தனைக் கவர்ந்து சென்றாளாமே!

4. கந்யா புரே தயிதயா ஸுகம் ஆரமந்தம்
ச ஏநம் கதஞ்சந பபந்துஷி சர்வ பந்தௌ
ஸ்ரீநாரத உக்த தத உதந்த துரந்த ரோஷை:
த்வம் தஸ்ய சோணிதபுரம் யதுபி: ந்யருந்தா:

பொருள்: குருவாயூரப்பா! அநிருத்தன் உஷாவுடன் அவளது அந்தப்புரத்தில் இன்பமாக இருந்தபோது, சிவபக்தனான பாணாசுரன் என்பவன் அவனைக் கட்டிப்போட்டு சிறை வைத்தான். இதனை நீ நாரதர் மூலமாக அறிந்தாய். உடனே நீ யாதவர்களுடன் கிளம்பி சோணிதபுரம் சென்று அந்த நகரை அழிக்கத் தொடங்கினாய்.

5. புரீ பால: சைல ப்ரிய துஹித்ரு நாத: அஸ்ய பகவாந்
ஸமம் பூத வ்ராதை: யது பலம் அசங்கம் நிருருதே
மஹா ப்ராண: பாண: ஜடிதி யுயுதாநேந யுயுதே
குஹ: ப்ரத்யும்நேந த்வம் அபி புர ஹந்த்ரா ஜகடிஷே

பொருள்: குருவாயூரப்பா! ஆனால் அந்தப் பாணாசுரன் நகரத்தைக் காப்பவரும், பார்வதியின் கணவனும் ஆகிய சிவன், உனது யாதவர் படையை விரட்ட ஆரம்பித்தார். அந்தப் போரில், பாணாசுரன் ஸாத்யகியுடனும், முருகன் ப்ரத்யும்னனோடும், சிவன் உன்னோடும் சண்டையிட்டனர் அல்லவா?

6. நிருத்த அசேஷ அஸ்த்ரே முமுஷி தவ அஸ்த்ரேண கிரிசே
த்ருதா பூதா பீதா: ப்ரமத குல வீரா: ப்ரமயிதா:
பராஸ் கந்தத் ஸகந்த: குஸும சர பாணை: ச ஸசிவ:
ஸ: கும்பாண்ட: பாண்டம் நவம் இவ பலேந ஆசு பிபிதே

பொருள்: குருவாயூரப்பா! பரமசிவன் உன்மீது எய்த அனைத்து அஸ்திரங்களையும் நீ சுலபமாக உனது அஸ்திரங்களால் தடுத்தாய். மேலும் சிவனையும் மயக்கமுற்று விழும்படி செய்தாய். இதனைக் கண்ட பூதகணங்கள் பயந்து ஓடிவிட்டன. பூதகணங்களின் தலைமை சேனாதிபதிகள் மிகவும் துன்பம் அடைந்தனர். தனது மன்மத பாணங்கள் மூலம் முருகனைப் ப்ரத்யும்னன் புறமுதுகு காண்பித்து ஓட வைத்தான். பாணாசுரனின் மந்திரியான கும்பாண்டன் என்பவனை ஒரு பாண்டத்தை உடைப்பது போல் பலராமன் கொன்றான்.

7. சாபாநாம் பஞ்ச சத்யா ப்ரஸபம்
உபகதே சிந்ந சாபே அத பாணே
வ்யர்த்தே யாதே ஸமேத: ஜ்வர பதி:
அசநை: அஜ்வரி த்வத் ஜ்வரேண
ஜ்ஞாநீ ஸ்துத்வா அத தத்வா தவ சரித
ஜுஷாம் விஜவரம் ஸ ஜ்வர: அகாத்
ப்ராய: அந்த: ஜ்ஞாநவந்த: அபி ச பஹு
தமஸா ரௌத்ர சேஷ்டா ஹி ரௌத்ரா:

பொருள்: குருவாயூரப்பா! அதன் பின்னர் பாணாசுரன் ஐந்நூறு விற்களோடு உன்னுடன் போர் புரிய வந்தான். அவனுடைய விற்கள் அனைத்தும் முறிந்தவுடன், அவன் ஓடிவிட்டான். அப்போது சைவ ஜ்வரத்தின் தலைவன் உன்னை எதிர்த்தான். ஆனால் அவன் உனது வைணவ ஜ்வரத்தினால் விரட்டியடிக்கப்பட்டான். மிகுந்த ஞானம் உடைய அவன் ஓடும்போது, க்ருஷ்ணா! உனது மகிமைகளைக் கூறுபவர்களுக்கு ஜ்வரத்தின் வேதனைகளே இருக்காது என்று வரம் கொடுத்தனர். சிவனைக் சார்ந்தவர்கள் மிகுந்த ஞானம் உள்ளவர்களாக இருந்தாலும் தங்கள் தமோ குணம் காரணமாக கொடுமையான செயல்களையே செய்பவர்கள் போல் உள்ளதே!

8. பாணம் நாநா ஆயுத உக்ரம் புந:
அதிபதிதம் தர்ப தோஷாத் விதந்வந்
நிர்லூந அசேஷ தோஷாம் ஸபதி
புபுதுஷா சங்கரேண உபகீத:
தத் வாசா சிஷ்ட பாஹு த்விதயம்
உபயதோ நிர்பயம் தத் ப்ரியம் தம்
முக்த்வா தத் தத்த மாந: நிஜ புரம்
அகம: ஸாநிருத்த: ஸஹோஷ:


பொருள்: குருவாயூரப்பா! மறுபடியும் பலவகையான கொடிய ஆயுதங்கள் ஏந்தியவனாகவும் கர்வம் உடையவனாகவும் பாணாசுரன் உன்னுடன் போர் புரிய வந்தான். நீ அவனது ஆயிரம் கைகளையும் வெட்டி எறிந்தாய். இதன் மூலம் அவனது பாவங்களும் தொலைந்தன. தனது பக்தனின் தோஷங்கள் யாவும் நீங்கியதை உணர்ந்த சிவன் உன்னை வணங்கினார். அவர் வேண்டுகோளுக்கு இணங்க, பாணாசுரன் உன்னை வணங்க இரண்டு கைகளை மட்டும் உடையவனாகச் செய்தாய். அவனை விடுதலை செய்தாய். அவன் உனக்கு பல மரியாதைகள் செய்தான். பின்னர் நீ அநிருத்தனோடும், உஷாவோடும் துவாரகை சென்றாய்.

9. முஹு: தாவத் சக்ரம் வருணாம் அஜய: நந்த ஹரணே
யமம் பால ஆநீதௌ தவ தஹந பாநே அநில ஸகம்
விதிம் வத்ஸ ஸ்தேயே கிரிசம் இஹ பாணஸ்ய ஸமரே
விபோ விச்வ உத்கர்ஷீ தத் அயம் அவதார: ஜயதிதே

பொருள்: எங்கும் உள்ளவனே! குருவாயூரப்பா! நீ இந்திரனை பலமுறை வென்றாய்; நந்தகோபரை வருணன் கவர்ந்து சென்றபோது அவனை அடக்கினாய்; ஸாந்தீபநி முனிவரின் மகனை மீட்டபோது யமனை வென்றாய்; காட்டில் உண்டான நெருப்பை உண்டபோது அக்னி தேவனை வென்றாய்; ப்ரும்மா கன்றுகளையும் சிறுவர்களையும் மறைத்தபோது அவனை வென்றாய்; இப்போது பாணாசுர யுத்தத்தில் பரமசிவனையும் வென்றாய் - க்ருஷ்ணா! பகவானே! குருவாயூரப்பா! இதனால்தான் உனது இந்த க்ருஷ்ணாவதாரம் மற்ற அவதாரங்களிலும் மேன்மை உடையதாக உள்ளது.

10. த்விஜ ருஷா க்ருகலாஸ வபு: த்ரம்
ந்ருக ந்ருபம் த்ரிதவ ஆலயம் ஆபயந்
நிஜ ஜநே த்விஜ பக்திம் அநுத்தமாம்
உபதிசந் பவந ஈச்வர பாஹிமாம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ந்ருகன் என்ற அரசன் ஓர் அந்தணனின் சாபத்தால் ஓணானாக அலைந்தான் நீ அவனது சாபத்தை நீக்கி பெருமை அளித்தாய். இதன் மூலம் அனைவருக்கும் அந்தணர்களிடம் பக்தி இருக்க வேண்டும் என்று உணர்த்தினாய். இப்படிப்பட்ட நீ என்னைக் காப்பாற்ற வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar