Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடைசி வரை செல்லுங்கள்! பேச்சில் கில்லாடி ஆகணுமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கவனம் தவறினால் சிரமம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2015
04:08

இயேசுவின் முள்கிரீடம் அவருக்கு பரிசாகத் தரப்பட்ட தோட்டத்தில் வளர்ந்த முட்செடியில் இருந்தே செய்யப்பட்டது என்ற தகவலை ஒரு கதை உறுதிப்படுத்துகிறது.சிமியோன் என்பவன் தனக்கு தொழுநோய் இருப்பதாகவும், அதை குணமாக்கித் தரும்படியும் இயேசு கிறிஸ்துவிடம் முறையிட்டான். ஆண்டவரே! இந்த பயங்கரமான நோயில் இருந்து எனக்கு விடுதலை தாரும், என்றான். அவர் அவனிடம், உன்னைச் சுத்தமாக்க (குணப்படுத்த) எனக்கு வல்லமை உண்டு என விசுவாசிக்கிறாயா? என்று கேட்டார்.அவனும், ஆம் ஆண்டவரே! உம்முடைய வல்லமையால் என்னைக் குணமாக்க உம்மால் ஆகும் என விசுவாசிக்கிறேன், என்றான்.நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது. உன் தொழுநோய் நீங்கி சுகம் பெறுவாயாக, என்றார் இயேசு. அப்படியே அவனும் சுகம் பெற்றான். சிமியோன் இயேசுவிடம், ஆண்டவரே! என்னைக் குணமாக்கியதற்கு நன்றிக் காணிக்கையாக நான் ஒரு சிறிய திராட்சைத் தோட்டத்தைத் தருகிறேன். அதை நீர் ஏற்றுக் கொள்ள வேண்டும், என்று வேண்டினான்.அது தனக்கு வேண்டாம் என இயேசு சொன்னார். ஆனாலும், அவன் வற்புறுத்தி அதை அவரிடம் கொடுத்து விட்டான்.அந்த தோட்டத்தில் ஒரு முள்செடி இருந்தது. அதை முழுமையாக அகற்றிவிடும்படி அவர் சீயோனிடம் சொன்னார். அவனும் வேலைக்காரர்களை அனுப்பி வைத்தான்.

அவர்கள் வேரோடு அதை அகற்றாமல் மேல் பகுதியை மட்டும் வெட்டி சென்று விட்டனர். எனவே, அந்தச் செடி மீண்டும் முளைத்து விட்டது.பிற்காலத்தில், இயேசுவின் மீது பல புகார்களைக் கூறிய தலைமை குரு, அவரது தலையில் முள் கிரீடம் வைக்க ஆணையிட்டார். ஒரு போர்வீரன், இயேசுவின் தோட்டத்திற்குச் சென்று, அந்த முள்செடியை வெட்டி அதைக் கொண்டே கிரீடம் செய்து அவரது தலையில் வைத்து அழுத்தினான். அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தது.சிமியோன் அழுது புலம்பினான். ஆண்டவர் சொன்னபடி, முழுமையாக அந்தச் செடியை அகற்றாமல் விட்டுவிட்டேனே, என புலம்பினான்.நம் தவறுகளையும், பாவங்களையும் வேரோடு அழிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது நம்மையே திருப்பித் தாக்கும். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து, விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான், என்கிறது பைபிள். உங்கள் செயல்பாடுகளில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். கவனம் தவறினால் அது பெரும் சிரமத்தைத் தரும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar