Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கவனம் தவறினால் சிரமம்! பூஜை நடக்கும் போது கண் திறந்து ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பேச்சில் கில்லாடி ஆகணுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2015
04:08

சிலர் சிறந்த படிப்பாளிகள், எழுத்து வன்மை மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு மற்றவர்களுடன் பேச கூச்சமாக இருக்கும். இந்த நிலை மாறி, மேடைப் பேச்சாளர் போல் முழங்க ஆசைப்படுபவர்கள் சிதம்பரம் திருமூலநாதர் (நடராஜர் கோவில் மூலவர்) மற்றும் உமையம்மையை மனதில் நினைத்து, மாணிக்கவாசகர் அருளிய இந்தப் பாடலைப் பாடலாம்.

பூசுவதும் வெண்ணீறு
பூண்பதுவும் பொங்குஅரவம்,
பேசுவதும் திருவாயால்
மறைபோலும்? காண், ஏடீ!
பூசுவதும் பேசுவதும்
பூண்பதுவும் கொண்டு என்னை?
ஈசன் அவன், எவ்வுயிர்க்கும்
இயல்புஆனான்; சாழலோ.
.
 என்அப்பன், எம்பிரான்
எல்லார்க்கும் தான்ஈசன்
துன்னம்பெய் கோவணமாக்
கொள்ளும்அது, என்ஏடீ!
மன்னுகலை, துன்னுபொருள்,
மறைநான்கே, வான்சரடாத்
தன்னையே கோவணமாச்
சாத்தினன்; காண்; சாழலோ
.
கோயில் சுடுகாடு
கொல்புலித்தோல், நல்ஆடை;
தாயும்இலி; தந்தை இலி;
தான்தனியன்; காண்; ஏடீ!
தாயும்இலி; தந்தை இலி
தான்தனியன் ஆயிடினும்
காயில், உலகு அனைத்தும்,
கல்பொடி, காண், சாழலோ.

 அயனை, அனங்கனை,
அந்தகனைச், சந்திரனை
வயனங்கள் மாயா
வடுச்செய்தான்; காண், ஏடீ!
நயனங்கள் மூன்றுடைய
நாயகனே தண்டித்தால்
சயம்அன்றோ வானவர்க்குத்
தாழ்குழலாய்? சாழலோ
..
தக்கனையும் எச்சனையும்
தலைஅறுத்துத், தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்ததுதான் என் ஏடீ?
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்துஅருளி, அருள்கொடுத்து அங்கு
எச்சனுக்கு மிகைத்தலைமற்று
அருளினன்காண், சாழலோ.

அலரவனும் மால்அவனும்
அறியாமே, அழல்உருஆய்,
நிலம்முதல், கீழ்அண்டம்உற
நின்றதுதான், என்ஏடீ?
நிலம்முதல் கீழ்அண்டம் உற
நின்றிலனேல், இருவரும்தம்
சலமுகத்தால் ஆங்காரம்
தவிரார்; காண்; சாழலோ.
.
மலைமகளை ஒருபாகம்
வைத்தலுமே, மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையில்
பாயும்அது, என்ஏடீ?
சலமுகத்தால் அவன் சடையில்
பாய்ந்திலனேல், தரணிஎல்லாம்
நிலமுகத்தே புகப்பாய்ந்து,
பெருங்கேடாம்; சாழலோ.
..
கோலாலம் ஆகிக் குரைகடல்வாய்;
அன்று எழுந்த
ஆலாலம் உண்டான்;
அவன் சதுர்தான் என் ஏடீ?
ஆலாலம் உண்டிலனேல்,
அன்றுஅயன் மால் உள்ளிட்ட
மேல்ஆய தேவர்எல்லாம்
விடுவர்காண்; சாழலோ.
.
தென்பால் உகந்து ஆடும்
தில்லைச்சிற் றம்பலவன்,
பெண்பால் உகந்தான்
பெரும்பித்தன் காண், ஏடீ!
பெண்பால் உகந்திலனேல்
பேதாய், இருநிலத்தோர்
விண்பால் யோகுஎய்தி
வீடுவர்காண்; சாழலோ.
.
தான்அந்தம் இல்லான்
தனை அடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து
அழுத்துவித்தான்; காண் ஏடீ!
ஆனந்த வெள்ளத்து
அழுத்துவித்த திருவடிகள்,
வான்உந்து தேவர்கட்கு ஓர்
வான்பொருள்; காண்; சாழலோ.
.
நங்காய், இது என்னதவம்?
நரம்போடு எலும்பு அணிந்து
கங்காளம் தோள்மேலே
காதலித்தான்; காண் ஏடீ?
கங்காளம் ஆமாகேள்
கால ஆந்தரத்து இருவர்,
தம்காலம் செய்யத்
தரித்தனன்காண் சாழலோ
..
கான் ஆர் புலித்தோல்
உடை; தலை ஊண்; காடுபதி
ஆனால் அவனுக்கு இங்கு
ஆட்படுவார் ஆர்? ஏடி!
ஆனாலும் கேளாய்
அயனும் திருமாலும்,
வான் நாடர் கோவும்,
வழி அடியார் சாழலோ.
..
 மலை அரையன் பொற்பாவை,
வாள்நுதலாள், பெண்திருவை,
உலகு அறியத் தீ வேட்டான்
என்னும், அது என் ஏடீ!
உலகுஅறியத் தீ வேளாது
ஒழிந்தனனேல், உலகு அனைத்தும்
கலைநவின்ற பொருள்கள் எல்லாம்,
கலங்கிடும், காண்; சாழலோ.
.
தேன்புக்க தண்பணைசூழ்
தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம்
பயிலும் அது என்? ஏடீ!
தான்புக்கு நட்டம்
பயின்றிலனேல், தரணிஎல்லாம்
ஊண்புக்க வேல் காளிக்கு
ஊட்டுஆம்; காண்; சாழலோ.
.
கடகரியும் பரிமாவும்
தேரும் உகந்து ஏறாதே,
இடபம் உகந்து ஏறியவாறு
எனக்குஅறிய இயம்பு; ஏடீ!
தடமதில்கள் அவைமூன்றும்,
தழல்எரித்த அந்நாளில்,
இடபம் அதாய்த் தாங்கினான்,
திருமால்காண், சாழலோ.
.
நன்றாக நால்வர்க்கும்
நான்மறையின் உட்பொருளை,
அன்று, ஆலின்கீழ் இருந்து, அங்கு
அறம்உரைத்தான்; காண்; ஏடீ!
அன்று, ஆலின்கீழ் இருந்து, அங்கு
அறம் உரைத்தான் ஆயிடினும்
கொன்றான்காண், புரம்மூன்றும்
கூட்டோடே; சாழலோ.

அம்பலத்தே கூத்துஆடி,
அமுதுசெயப் பலிதிரியும்
நம்பனையும் தேவன் என்று,
நண்ணும் அது என்? ஏடீ!
நம்பனையும் ஆமாகேள்;
நான்மறைகள் தாம் அறியா
எம்பெருமான், ஈசா என்று
ஏத்தின காண்; சாழலோ.

 சலம் உடைய சலந்தரன் தன்
உடல்தடிந்த நல் ஆழி,
நலம் உடைய நாரணற்கு, அன்று
அருளியவாறு என்? ஏடீ!
நலம் உடைய நாரணன், தன்
நயனம்இடந்து அரன் அடிக்கீழ்
அலர்ஆக இட, ஆழி
அருளினன்; காண்; சாழலோ.

அம்பரம்ஆம், புள்ளித்தோல்;
ஆலாலம் ஆர்அமுதம்;
எம்பெருமான் உண்டசதுர்
எனக்கு அறிய இயம்பு; ஏடீ!
எம்பெருமான் ஏதுஉடுத்து,
அங்கு ஏது அமுது செய்திடினும்
தம்பெருமை தான் அறியாத்
தன்மையன்; காண்; சாழலோ.
.
 அரும்தவர்க்கு ஆலின் கீழ்
அறம்முதலா நான்கினையும்
இருந்து, அவர்க்கு அருளும் - அது
எனக்கு அறிய இயம்பு; ஏடீ!
அரும்தவர்க்கு, அறம் முதல் நான்கு
அன்று அருளிச் செயதிலனேல்
திருந்த, அவருக்கு உலகுஇயற்கை
தெரியா; காண்; சாழலோ.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar