பதிவு செய்த நாள்
20
ஆக
2015
12:08
நாமக்கல்: லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நடந்த, கருட பஞ்சமி விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். நாமக்கல் அடுத்த, சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும் கருட பஞ்சமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, நான்காம் ஆண்டு கருட பஞ்சமி விழா மற்றும் பால் குடம் ஊர்வலம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து, மகா விஷ்ணு, மகாலட்சுமி, பெரிய திருவடி கருடாழ்வார் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர், மூன்றாம் ஆண்டாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து, ஆண்டாள் அணிவித்த மாலை, திருப்பதி கருடசேவையில் நடப்பது போல், சேந்தமங்கலம் கருடபஞ்சமி விழாவுக்கு, வருகை புரிந்து லட்சுமி நாராயண பெருமாளுக்கும், ஸ்ரீரங்கத்தில் இருந்து மாலை வருகைப்புரிந்து மகாலட்சுமி தாயாருக்கும் அணிவிக்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஸ்வாமிக்கு அணிவிக்கப்பட்டது. மேலும், கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கருடாத்ரி பக்தகுழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.