பதிவு செய்த நாள்
24
ஆக
2015
12:08
ஊத்துக்குளி: ஊத்துக்குளி - குன்னத்தூர் ரோடு, வெள்ளியம்பதி பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா, 13ம் தேதி இரவு, பூச்சாட்டுடன் துவங்கியது.வரும், 26ம் தேதி இரவு கிராமசாந்தி; 27 காலை, கொடியேற்றம்; அன்றிரவு, கோவில் புகும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 29ம் தேதி காலை, மாவிளக்குடன் துவங்கும் விழாவில், இரவு முரசன் சுவாமிக்கு மாலை அணிவித்தல், குண்டம் திறப்பு நடக்கிறது. வரும், 30ம் தேதி காலை, குண்டம் விழா நடக்கிறது. செப்., 1ல், மறு பூஜை, மஞ்சள் நீர்; செப்., 2 காலை, மாலை கழற்றும் நிகழ்ச்சியுடன், குண்டம் விழா நிறைவடைகிறது.