திருப்புத்தூர்: திருப்புத்தூர் தென்மாப்பட்டு வேலாயுத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திருப்புத்தூர்,தென்மாப்பட்டு,தம்பிபட்டி சோழியவெள்ளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட வேலாயுத சுவாமி கோயிலில் திருப்பணி நடந்தது. கடந்த 19ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.ஆக.,20ல் 2,3 ம் காலயாக பூஜைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் காலை 8.30 மணிக்கு யாகசாலையிலிருந்து புனித கலசங்களில் புனிதநீர் கொண்ட கலசங்களுடன் சிவாச்சாரியார் புறப்பட்டனர். தொடர்ந்துகாலை 9.50 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.