ஊத்துக்கோட்டை : சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேக விழாநடந்தது. பெரியபாளையம் அடுத்த, மஞ்சங்காரணை கிராமத்தில் உள்ள மங்களாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், பகுதிவாசிகள் பங்களிப்புடன் நடைபெற்ற திருப்பணிகள் முடிந்துகும்பாபிஷேகம் நடத்ததிட்டமிடப்பட்டது. அதற்காக, கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், நான்கு கால யாக பூஜை, அங்குரார்ப்பணம் ஆகியவை நடந்தன. நேற்று காலை, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியைதரிசனம் செய்தனர்.