பதிவு செய்த நாள்
24
ஆக
2015
05:08
1. குசேல நாமா பவத: ஸதீர்த்யதாம்
கத: ஸ ஸாந்தீபநி மந்திரே த்விஜ:
த்வத் ஏக ராகேண தநாதி நிஸ்ப்ருஹ:
திநாதி நிந்யே ப்ரசமீ க்ருஹ ஆச்ரமீ
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஸாந்தீபனி முனிவரின் ஆஸ்மரத்தில் உன்னுடன் குசேலன் என்று ஒருவன் படித்தான். அவன் மிகவும் அமைதியானவன்; நல்ல இல்லறத்தில் உள்ளவன்; உன்னிடம் மாறாத அன்பும் பக்தியும் கொண்டிருந்தான். இதனால் இந்த உலகில் உள்ள பொரு ட்கள் மீது பற்றுதல் இல்லாமலே இருந்தான்.
2. ஸமாந சீலா அபி ததீய வல்லபா
ததா ஏவ நோ சித்த ஜயம் ஸமேயுஷீ
கதாசித் ஊசே பத வ்ருத்தி லப்தயே
ரமா பதி: கிம் ந ஸகா நிஷேவ்யதே
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மனைவியும் அவனுக்கு நிகரான குணங்களையும் அமைதியையும் பக்தியையும் உடையவளாகவே இருந் தாள். இருந்தாலும் தனது மனதை அவளால் அடக்க இயலவில்லை. ஒருநாள் அவள் குசேலனிடம், மஹாலக்ஷ்மியின் கணவனான அந்தக் க்ருஷ்ணன் உங்கள் நண்பனாயிற்றே! நமது குடும்பம் நடத்தத் தேவையான செல்வத்தை அவரிடம் இருந்து பெற இயலாதா? என்று கேட்டாள்.
3. இதி ஈரித: அயம் ப்ரியயா க்ஷுத் ஆர்த்தயா
ஜுகுப்ஸமாந: அபி தநே மத ஆவஹே
ததா த்வத் ஆலோகந கௌதகாத் யயௌ
வஹந் பட அந்தே ப்ருதுகாந உபாயநம்
பொருள்: குருவாயூரப்பா! தனது மனைவி பசியால் வருந்திய காரணத்தால் மட்டுமே கூறுகிறாள் என்பதை குசேலன் உணர்ந்தான். மிகுந்த செல்வம் என்பது கர்வத்தை வளர்க்கும் என்பதையும் அறிந்து செல்வத்தின் மீது வெறுப்புடன் இருந்தான். இருந்தாலும் நீண்ட நாளைக்குப் பின்னர் உன்னைச் சந்திக்கும் வாய்ப்பிற்காக மகிழ்ந்தான். தனது துணியின் முடிப்பில் சிறிது அவல் எடுத்துக் கொண்டு துவாரகைக்கு கிளம்பினானாமே!
4. கத: அயம் ஆச்சர்யமயீம் பவத் புரீம்
க்ருஹேஷு சைப்யா: பவநம் ஸமேயிவாந்
ப்ரவிச்ய வைகுண்டம் இவ ஆப நிர்வ்ருதிம்
தவ அதிஸம பாவநயா து கிம் புந:
பொருள்: குருவாயூரப்பா! உனது வியக்கத்தக்கதான துவாரகையை குசேலன் அடைந்தான். அதில் உள்ள பல உயர்ந்த வீடுகளுக்கு நடுவில் இருந்த ருக்மணியின் வீட்டை அடைந்தான். அப்போது அவன் வைகுண்டத்திற்குள் நுழைந்தது போன்று மிகுந்த ஆனந்தம் அடைந்தான். மேலும் நீ மிகவும் சிறப்புடன் அவனை வரவேற்றாய். இதனால் அவன் மேலும் ஆனந்தம் அடைந்தான் என்பதைக் கூறவேண்டுமா?
5. ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம்
கரே க்ருஹீத்வா அகதய: புரா க்ருதம்
யத் இந்தநார்த்தம் குரு தார சோதிதை:
அபர்து வர்ஷம் தத் அமர்ஷி காநநே
பொருள்: குருவாயூரப்பா! நீ அவனை மிகவும் அன்புடன் வரவேற்றாய். உனது ருக்மிணி விசிறி வீசி அவனை உபசரித்தாள். நீ அவனிடம், குசேலா! ஒரு முறை நமது குருவின் மனைவி நம்மை காட்டிற்கு விறகு வெட்ட அனுப்பினாள். அப்போது பெய்த பெரும் மழையில் நாம் அகப்பட்டுக் கொண்டோம் அல்லவா? என்று பழங் கதைகளைப் பேசி மகிழ்ந்தாய்.
6. த்ரபா ஜுஷ: அஸ்மாத் ப்ருதுகம் பலாத் அத
ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருத் ஆசிதே த்வயா
க்ருதம் க்ருதம் நநு இயதா இதி ஸம்ப்ரமாத்
ரமா கில உபேத்ய கரம் ருரோத தே
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தான் கொண்டு வந்த அவலை வெட்கத்தால் குசேலன் மறைத்து வைத்தான். நீ அதனைப் பறித்து ஒரு பிடி உண்டாயாமே! (நீ மேலும் ஒரு பிடி எடுத்து உண்ண முயற்சித்தபோது) ருக்மிணி ஓடிவந்து, போதும்! இத்தனை கொடுத்தது போதும் என்று உனது கைகளை பிடித்து நிறுத்தினாள் அல்லவா? (இதன் உட்கருத்து - இரண்டாவது பிடியை க்ருஷ்ணன் தின்றால் மேலும் குசேலனுக்குப் பொருட் செல்வம் அளிக்க வேண்டும் அதற்கான பொருள் லக்ஷ்மியிடமே இல்லை என்பதாகும். முதல் பிடியிலேயே க்ருஷ்ணனின் பக்தியால் அவ்வளவும் கொடுத்தாள்.)
7. பக்தேஷு பக்தேந ஸ மாநித: த்வயா
புரீம் வஸந் ஏக நிசாம் மஹா ஸுகம்
பத அபரேத்யு: த்ரவிணம் விநா யயௌ
விசித்ர ரூப: தவ கலு அநுக்ரஹ:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக பக்தர்களில் உயர்ந்த குசேலனை நீ பெருமைப்படுத்தினாய். அன்று இரவு முழுவதும் உனது துவாரகை மாளிகையில் அவன் இன்பமாக இருந்தான். மறுநாள் உன்னிடம் இருந்து எந்தப் பொருளும் கேட்காமலேயே சென்று விட்டான். உனது அருள் வழங்கும் முறையே வியப்பானதுதானே!
8. யதி ஹி அயாசிஷ்யம் அதாஸ்யத் அச்யுத:
வதாமி பார்யாம் கிம் இதி வ்ரஜந் அஸௌ
த்வத் உக்தி லீலா ஸ்மித மக்ந தீ: புந:
க்ரமாத் அபச்யந் மணி தீப்ரம் ஆலயம்
பொருள்: குருவாயூரப்பா! திரும்பி வரும் வழியில் அவன் மனதில், நாள் கிளம்பும்போது க்ருஷ்ணனிடம் ஏதேனும் யாசித்திருந்தால் கண்டிப்பாகக் கொடுத்திருப்பதான். இப்போது மனைவிக்கு என்ன பதில் கூறுவது? என்று நினைத்தான். ஆயினும் உடனே உனது கனிவான பேச்சிலும், வசீகரிக்கும் சிரிப்பிலும் மனம் திரும்பியவனாக நடந்தான். தனது வீட்டை நெருங்கும்போது இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டு ஒளி வீசிய மாளிகையைக் கண்டானாமே!
9. கிம் மார்க்க விப்ரம்ச இதி ப்ரமந் க்ஷணம்
க்ருஹம் ப்ரவிஷ்ட: ஸ ததர்ச வல்லபாம்
ஸகீ ப்ரீதாம் மணி ஹேம பூஷிதாம்
புபோத ச த்வத் கருணாம் மஹா அத்புதாம்
பொருள்: குருவாயூரப்பா! அந்த மாளிகையைக் கண்ட குசேலன் தான் வழி தவறி வேறு வீட்டிற்கு வந்து விட்டோமோ என்று திகைத்தான்! தனது வீட்டிற்குள் நுழைந்தான். அங்கு தன் மனைவி தங்க நகைகளையும், இரத்தினக் கற்களையும், ஆபரணங்களாக அணிந்திருப்பதையும், தோழிகள் புடைசூழ உள்ளதையும் கண்டான். இவை அனைத்தும் உனது அற்புதமான கருணையின் விளைவே என்று உணர்ந்தானாம்.
10. ஸ ரத்ந சாலாஸு வஸந் அபி ஸ்வயம்
ஸமுந்நமத் பக்தி பர: அம்ருதம் யயௌ
த்வம் ஏவம் ஆபூரித பக்த வாஞ்சித:
மருத் புர அதீச ஹரஸ்வ மே கதாந்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ரத்னங்கள் பல உள்ள அந்த மாளிகையில் குசேலன் வாழ்ந்து வந்தாலும் உன்னிடம் மாறாத அன்பும் பக்தியும் கொண்டிருந்தான். இதனால் அவன் அமிர்தமான மோட்சத்தை அடைந்தான். இப்படியாக உனது பக்தனான குசேலனின் விருப்பங்களை நிறை÷ வற்றிய நீ, எனது பிணிகளைத் தீர்க்க வேண்டும்.