பதிவு செய்த நாள்
24
ஆக
2015
05:08
சென்னை: தம்புசெட்டித்தெரு, ஸாம்பமூர்த்தி சிவாசார்ய ஸதனத்தில் இயங்கும் சிவாசார்யர் அறக்கட்டளையின் சித்தாந்த ப்ரவசன கோஷ்டத்தில், சைவாகம கலாசார வித்யாகேந்திரம் ஸ்ரீசாம்பமூர்த்தி சிவாசார்யர் பவுண்டேஷனின் சுவாமி சதாசிவோம் சிவாகம ஞானகேந்திரம் ஆகியன இணைந்து ஏழாம் ஆண்டாக மாதந்தோறும் நடத்திவரும் இந்த ஆகம கருத்துக் கூட்டம் 30.8.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையில்.கோயில் திருமாகாளம் ஸ்ரீமஹாகாளநாதர் கோயில் ஸ்தானீகரும் ஆகம ஆசார்யரும், சிவாகமப்ரயோக நிபுணரும், ஆலய ய õக ஸர்வஸாதகரும், சைவசமய போதகரும், திவ்ய அலங்கார கலா ரத்னமுமான ஆகமப்ரவீணர் சிவஸ்ரீ டி. மாதுபுரீஸ்வர சிவாசார்யர் அவர்களால், சைவாலயங்களில் ஏழு கிழமைகளில் செய்யத்தக்க சிறப்புமிகு வாரோத்ஸவ பூஜை முறையை விளக்கும் விதமாக ஆலய ஸப்த வார பூஜாவிதானம் எனும் தலைப்பில் தமிழில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற உள்ளது. சைவாகமகலாசாரத்தில் விழிப்புணர்வு மேம்படும்பொருட்டு, ஆகம அறிஞர் ஒருவர் 96 நிமிட காலம் ஆகமகருத்தை விரிவாக ஒரே தலைப்பில் விளக்கிடும் வகையில் சிறப்பானதாகவும், மாதம் ஒருமுறை மட்டுமே அரிதாகவும் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.
தொடர்புக்கு:
பவுண்டேஷன் நிறுவனர்,
சிவஸ்ரீ. டாக்டர்.டி.எஸ். ஷண்முகசிவாசார்யர் எம்.ஏ.பிஹச்.டி.
இயக்குனர் எஸ்.எஸ். ஞானகேந்திரம். செல்: 90031 37320
அறக்கட்டளை நிறுவனர்,
சிவஸ்ரீ. டி.எஸ். காளிதாஸசிவாசார்யர், இயக்குனர் எஸ்.கே. வித்யாகேந்திரம்,
செல்: 94443 99954
ஒருங்கிணைப்பாளர்,
சிவஸ்ரீ.வி. சோமசேகரசிவாசார்யர்
முதல்வர். எஸ்.கே.வி.கே செல்: 98402 99352
சிவாசார்யர் அறக்கட்டளை (பதிவு)
சைவாகம கலாசார வித்யா கேந்திரம் (எஸ்.கே.வி.கே)
புது எண். 207/101, தம்பு செட்டித் தெரு, முத்தியால்பேட்டை, சென்னை-600 001.
ஸ்ரீசாம்பமூர்த்தி சிவாசார்யர் பவுண்டேஷன்
சுவாமி சதாசிவோம் சிவாகம ஞானகேந்திரம் (எஸ்.எஸ்.ஜி.கே)
புது எண். 76/96, ராமசாமி தெரு, மண்ணடி, சென்னை- 600 001.