பதிவு செய்த நாள்
26
ஆக
2015
12:08
திருவள்ளூர்: திருவள்ளூர் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று மூல மந்திர ஹோமம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, தேவி மீனாட்சி நகரில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 32 அடி உயரத்தில் அமைந்துள்ள மூலவருக்கு, கடந்த 20ம் தேதி, நரசிம்மர் சகஸ்ரநாமம் நடந்தது. நேற்று, காலை 9:00 மணி முதல் 11:30 மணி வரை, மூல மந்திர ஹோமம் நடந்தது. பின், ஆஞ்சநேயருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடந்தது. இதே போல், சிவ-விஷ்ணு கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு, மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று காலை, 8:00 மணியளவில், சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று, பஞ்சமுக ஆஞ்சநேயர் மூலவருக்கு திருமஞ்சனம், காலை, 9:00 மணி முதல் 11:30 மணி வரை நடக்கிறது.