பதிவு செய்த நாள்
27
ஆக
2015
12:08
பொள்ளாச்சி: டி.கோட்டாம்பட்டி வரசித்தி விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம் நடக்கிறது. இக்கோவலில் நேற்று மாலை, 4:30 மணி முதல் விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்பஸ்தாபனம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட சடங்குகளும், இரவு, 8:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றலும் நடந்தன. இன்று காலை, 5:50 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், 8:30 மணி முதல் கோவில் விமானம், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிேஷகமும், தச தரிசனம், தசதானம், மகா அ பிேஷகம், அலங்கார பூஜை, அன்ன தானம் நடைபெறும். இத்தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.