பதிவு செய்த நாள்
28
ஆக
2015
12:08
அவலூர்பேட்டை : தொரப்பாடி தண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.மேல்மலையனூர் ஒன்றியம், தொரப்பாடி தண்டு மாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவை முன்னிட்டு 26ம் தேதி காலையில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், எஜமான சங்கல்பம், கோ பூஜை, கணபதி, சுதர்சன, நவக்கிரக ஹோமங்களும், மாலையில் வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசமும், யாகசாலை விசேஷ பூஜையும் நடந்தன.இதனை தொடர்ந்து நேற்று (27ம் தேதி) காலைவிக்னேஸ்வர பூஜையும், சங்கல்பமும், 8:45 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கினர்.ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி பச்சையப்பன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.