சென்னை: காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பொருமாள் கோவிலில், அன்னகூட உற்சவத்தை முன்னிட்டு, பவழ வண்ணப்பெருமாளுக்கு கோவர்த்தன மலையை கையில் பிடித்த கண்ணன் அலங்காரம் செய்யப்பட்டது. 16 வகை லட்டு, முறுக்கு உள்ளிட்ட இனிப்புகள் படையலிடப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.