ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் நான்கு கால் மண்டபத்தில் விநாயகர் உள்ளார். சூரிய ஒளி விழும் வகையில் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது சன்னிதியில் விமானம் கட்ட முயற்சித்தால் பல இடையூறுகள் வருகின்றன. எனவே வெயிலே இவருக்கு உகந்தது என முடிவு செய்து வெயில் உகந்த விநாயகர் என்ற பெயரையும் பெற்று விட்டார். பார்வதியின் தந்தை தட்சன் செய்த யாகத்தில் சிவனின் அனுமதியின்றி சூரியன் கலந்து கொண்டார். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க இந்த விநாயகரை வணங்கினார். இதனாலும் வெயில் உகந்த விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டதாக தலபுராணம் சொல்கிறது. இருப்பிடம்: மதுரையில் இருந்து தொண்டி வழியாக 90 கி.மீ., அலைபேசி: 97875 18492.