ஜப்பானில், காங்கி-டெக் என்ற புத்தமத கடவுளுடன் விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இவரை விநாயக்ஷா, கவான்வின் ஷேர் என்ற பெயரில் அழைக்கின்றனர். யோக நிலையிலும் விநாயகர் சிலைகள் உள்ளன. இங்குள்ள கோவில்களில் நான்கு திசைகளுக்கு ஒரு விநாயகர் சிலை வீதம் அமைக்கப்பட்டு திசைகளின் காவலராக கருதி வழிபடுகின்றனர். கி.பி.6ம் நுõற்றாண்டில் இங்கு விநாயகரை வழிபடும் வழக்கம் துவங்கியது.