ஆற்றில் நீர்வரத்து குறைந்து வறட்சி ஏற்படும் நிலை வந்தால், மிளகினை ஆற்று நீரில் நனைத்து, அரைத்து விநாயகருக்கு சாத்தும் வித்தியாசமான வழிபாடு ஓர் ஊரில் நடத்தப்படுவது உங்களுக்குத் தெரியுமா ? திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி என்ற ஊரில் வறட்சிக் காலங்களில் கடைபிடிக்கப்படும் இந்த வழிபாட்டால் ஆற்றில் நீர் நிறைந்து, ஊரும் பசுமையாகக் காணப்படுமாம். அதனால் அவ்வூர் விநாயகரை மிளகுப் பிள்ளையார் என்றே அழைக்கிறார்கள்.