கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் அழகர் கோயில் என்னும் சித்தர்கோயில் உள்ளது. இங்குள்ள யானை சிற்பம் கதை வேலைப்பாடுகளுடன் 60 அடி உயரமும், 48 அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய சிற்பம். அக்காலத்தில் இக்கோயிலில் இரண்டு கிணறுகளில் முனிவர்கள் இருவர் தவம் செய்து கொண்டு இருந்தபோது, பெண் ஒருத்தி வாளியை கிணற்றில்விட்டு தண்ணீர் முகர்ந்தால் தவம் கலைந்த முனிவர் பெண்கள் இப்பகுதிக்கு வரக் கூடாது என சபித்துவிட்டார். அன்றிலிருந்த பெண்கள் இக் கோயிலுக்குச் செல்ல அனுமதிக் கிடையாது.