மதுரை: மதுரை தெற்காவணி மூலவீதி, மேல ஆவணி மூலவீதியில் அமைந்துள்ள சொர்ண பாண்டிய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.செப்., ௧௪ல் யாகசாலை பூஜை துவங்கின. மூன்றாம் கால யாக பூஜை முடிந்து, நேற்று காலை ராஜா பட்டர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை தியாகராஜன், கவுரவ ஆலோசகர் பாஸ்கரன், செயலாளர்கள் கனகசுந்தரம், சத்தியமூர்த்தி, பொருளாளர் ஜெகநாதன், நிர்வாகிகள் சண்முக சுந்தரம், சண்முகம், கண்ணன் மற்றும் அறக்கட்டளை திருப்பணி, கும்பாபிஷேக கமிட்டியினர் செய்திருந்தனர்.