புதுச்சேரி: புதுச்சேரியில், புரட்டாசி கோலாகல விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாண்டுரங்க பஜன் சமாஜ் சார்பில், புரட்டாசி கோலாகல விழா, லாஸ்பேட்டை, பெத்துசெட்டிப்பேட்டையில் உள்ள விவேகானந்தா கல்வி வளாகத்தில், வரும் 2ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் மாலை 6:15 மணிக்கு, ராஜகோபால் தாஸ் பாகவதர் குழுவினரின் சிறப்பு பஜனையும், 8:45 மணிக்குமேல், நாம சங்கீர்த்தனமும் நடக்கிறது. மறுநாள், 3ம் தேதி மாலை 6:15 மணிக்கு, மஞ்சப்பரா மோகன் பாகவதர் குழுவினரின் கிருஷ்ண கானம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ரெயின்போ நகர் பாண்டுரங்க பஜன் சமாஜ் நிர்வாகிகள் செய்துள்ளனர்.