பதிவு செய்த நாள்
18
செப்
2015
12:09
குளித்தலை: கழுகூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரி, ராமேஸ்வரம் போன்ற நதிகளில் இருந்து புண்ணிய தீர்த்தங்கள் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். யாகசாலை பூஜைகள் நடந்தன. யாகசாலையில், கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் ஹோமங்கள் நடந்தது. நிறைவு நாளில் திராவியகுதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. பின், விநாயகர், மாரியம்மன், காளியம்மன், பகவதியம்மன், முருகன் உள்பட பரிவார தெய்வங்களுக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.