மதுரை : மதுரையில் இந்து ஆலயப் பாதுகாப்புக்குழுக் கூட்டம், மாநில பொது செயலாளர் சுந்தரவடிவேல் தலைமையில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் சுதாகர், அலுவலக துணை செயலாளர் குமார் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். உழவாரப்பணி, கூட்டு வழிபாடு குறித்து விவாதிக்கப்பட்டது. வைகை தென்கரையில் அமைந்து உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இன்றி திருமலைராயர் பால பணி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.