பதிவு செய்த நாள்
29
செப்
2015
11:09
கோவை: ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில், கோவையில், நாமசுதா என்றழைக்கப்படும், 90 மணி நேரத்துக்கு தொடரும், அகண்டநாம பஜனை, இசை நிகழ்ச்சி, நாளை துவங்கி, அக்., 4 வரை நடக்கிறது. ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில், கோவை, சாய்பாபா கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, சாய்தீப் திருமணமண்டபத்தில், 90 மணி நேரத்துக்கு, இடைவிடாமல் தொடர்ந்து நடைபெறும் நாமசுதா என்றழைக்கப்படும் அகண்ட நாம பஜனை நடக்கிறது. நாளை மாலை 4:50 மணிக்கு இறைவணக்கம், ஒற்றுமையை வலுப் படுத்த, மாலை 5:50 மணிக்கு, விளக்கு ஏந்தி சிறப்பு பிரார்த்தனை, தொடர்ந்து, சர்வ தர்ம பிரார்த்தனை, வேதச்சொற்பொழிவு ஆகியவை நடக்கின்றன. மாலை 6:00 மணிக்கு, 90 மணி நேரம் தொடரும், அகண்டநாம பஜனை துவங்குகிறது. அக்., 4 பகல், 12:00 மணிக்கு நிறைவு பெறுகிறது. 12.15 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் அகண்டநாம பஜனை நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி நிறுவனங்கள் (தமிழ்நாடு) செய்துள்ளன.