Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாளயபட்ச கால நிபந்தனைகள் அங்கேயும் ஒரு தேர்வு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அதிக வருமானம் உள்ளவரா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2015
12:09

உங்களுக்கு வருமானம் அதிகமாக இருக்கலாம். இதில் தேவை போக மீதியை எதற்கு செலவழிக்க வேண்டும் என நபிகள் நாயகம் கூறியுள்ளதாவது. நீ தேவைக்கு அதிகமான உனது செல்வத்தை ஏழ்மையில் வாடும் இறையடியார்களுக்காகவும், மார்க்கப் பணிகளுக்காகவும் செலவிடு. அதுவே உனக்கு நன்மை தரும். தேவைக்கு அதிகமான செல்வத்தை தேவையுடையவர்களுக்காக நீ செலவிடாவிட்டால் இறுதியில் அது உனக்கு தீங்கு பயக்கும். உன்னிடம் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு மட்டுமே செல்வம் இருக்கின்றது என்றால், அதிலிருந்து நீ செலவிடாவிட்டால், அதற்காக அல்லாஹ் உன்னைக் கண்டிக்க மாட்டான். நீ எவருக்குப் பொறுப்பாளியாய் இருக்கிறாயோ, அவர்களிலிருந்து தர்மம் செய்யத் தொடங்கு, என்றார்.அவர் மேலும்,  நீ தேவையுள்ள என்னுடைய அடியார்களுக்காகவும் மார்க்கப் பணியை வளர்ச்சி பெறச் செய்வதற்காகவும் செலவிட்டால், நான் உனக்காகச் செலவு செய்வேன் என்று எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான், என்றார்.இதில் உனக்காகச் செலவு செய்வேன் என்பதன் அர்த்தம் தெரியுமா!மனிதன் தன் சம்பாத்தியத்திலிருந்து பிற மக்களின் தேவைகளுக்காகவும், மார்க்கப் பணிகளுக்காகவும் செலவிடுகின்ற செல்வம் எதுவாயினும் அது வீணாகி விடுவது இல்லை. மாறாக, அவன் அதற்கான கூலியை மறுஉலகத்திலும் பெற்றுக் கொள்வான், இவ்வுலகிலும் பெற்றுக் கொள்வான். உலகில் அவனது செல்வத்தில் செழிப்பும், வளமும் உண்டாகும். மறுமையில் அவன் கூலியாகப் பெறுவது எதுவாயினும் அதன் அளவை இங்கே மதிப்பிட்டு விட முடியாது என்பதாகும். அபூதர் (ரலி) என்பவர் ஒருமுறை நபிகள் நாயகம் முன் சென்றார். அப்போது நாயகம், அவர்கள் அழிந்து போய் விட்டார்கள் என்று கூறினார். அதற்கு அபூதர் (ரலி) யார் அழிந்து போய் விட்டார்கள்? என கேட்டார்.அதற்கு அண்ணலார், செல்வந்தர்களாய் இருந்தும் செலவழிக்காமல் இருப்பவர்கள் அழிந்து போய் விட்டார்கள். முன்னால் இருப்பவர்களுக்கும், பின்னால் இருப்பவர்களுக்கும், வலதுபக்கம் இருப்பவர்களுக்கும், அனைவருக்கும் செல்வத்தை அள்ளித்  தருபவர்கள் வெற்றியடைந்தவர்கள் ஆவர். ஆனால், இப்படிச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். என்றார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar