Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி ... மீனாட்சி கோயிலில் போட்டோ உரிமம் வழங்க டெண்டர்! மீனாட்சி கோயிலில் போட்டோ உரிமம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவில் சிற்பங்களின் பழமை மாறாமல் புனரமைக்க அறிவுரை!
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவில் சிற்பங்களின் பழமை மாறாமல் புனரமைக்க அறிவுரை!

பதிவு செய்த நாள்

30 செப்
2015
11:09

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், இந்திய தொல்லியல்துறை தென்மண்டல துணை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி நேற்று  ஆய்வு செய்தார். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் 1,500 ஆண்டுகளுக்கு முன் விபச்சித்து முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு,  கண்டராதித்தசோழன், செம்பியன்மாதேவி, கிருஷ்ணப்ப நாயக்கர் உட்பட பலரால் திருப்பணிகள் செய்யப்பட்டன.  இந்நிலையில் தற்போது, ÷ காவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 18.5 லட்சம் ரூபாய் செலவில் மேற்கு கோபுர புனரமைப்பு பணி முடிந்தது.  தொடர்ந்து புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இக்கோவிலில், இந்திய தொல்லியல்துறை தென்மண்டல துணை கண்காணிப்பாளர்  மூர்த்தீஸ்வரி நேற்று ஆய்வு செய்தார். அவர், கிழக்கு, மேற்கு,  தெற்கு, வடக்கு ராஜகோபுரங்கள், சுவாமி சிலைகள், கலைநயத்துடன் உள்ள பரதநாட்டிய சிற்பங்கள்; விருத்தாம்பிகை, விபச்சித்து முனிவர், தலவி ருட்சமான வன்னி மரம், கல்வெட்டுக்களை பார்வையிட்டார்.அப்போது, சிற்பங்களின் பாரம்பரியம், பழமை மாறாமல் புனரமைக்கவும், மன்னர்கள்  கால கட்டடக்கலை மாறாமல் இருக்க கருங்கற்களுக்கு இடையே சமீபத்தில் பூசிய சுண்ணாம்பு கலவைகளை அகற்றவும் இந்து சமய அறநிலைய த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், மேற்கு பகுதி ஆகம சன்னதியில் உள்ள 28 லிங்கங்கள், குமரேசன், வள்ளி, தெய்வானை  சுவாமிகளைப் பார்வையிட்டு, 28 ஆகம லிங்கங்களின் சிறப்புகளை பொது மக்கள் அறியும்படி தகவல் பலகை வைக்கவும், ஹைட் துரை பி ரகாரத்தில் உள்ள கற்களை அகற்றி, மக்கள் சிரமமின்றி வலம் வர, புதிய கற்களை பதிக்க உத்தரவிட்டார். அவர், ‘தினமலர்’ நிருபரிடம் கூறியதாவது:   பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவிலின் சிற்பங்கள், கட்டடக்கலை, தொன்மை வாய்ந்தது; பாரம்பரியம் மிக்கது. தமிழகத்தின் கட்டடக்கலை,  சிற்பக்கலைக்கென உலக அரங்கில் தனி இடம் உள்ளது. இதன் அருமை தெரிந்த வெளிநாட்டினர் இங்கு வந்து பார்வையிட்டு, வழிபடுகின்றனர்.  ஆனால், நம் நாட்டில் படித்தவர்கள் கோவில் கோபுரங்கள், பழமையான சிற்பங்கள் மீது கிறுக்கி வைத்து, அதன் தொன்மையை பாழாக்குகின்றனர்.  நமது கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரிய அடையாளங்களை பாதுகாக்கும் பொறுப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் உள்ளது’  என்றார். ஆய்வின்போது, செயல் அலுவலர் கொளஞ்சி, பொறியாளர் உமா, ஆய்வாளர் சுபத்ரா உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar