பதிவு செய்த நாள்
05
அக்
2015
12:10
நாமக்கல்: கம்பலராய பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் அடுத்த காதப்பள்ளி கம்பலராய மலையில் கம்பலராய பெருமாள், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கோபுரம், தீபஸ்தம்பம், திருமதில் ஆகியவை புனரமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. அனைத்து திருப்பணிகளும் முடிந்த நிலையில், நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 8 மணிக்கு, காவிரி ஆற்றில்இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. இரவு, 10 மணிக்கு, கோபுரம் கண் திறப்பு, கலசம் வைத்தல், ஆஞ்சநேயர் எள்வகை மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று, காலை, 6 மணிக்கு, புண்யாகவாசனம், இரண்டாம் காலயாக பூஜை, நாடி சந்தனம், சக்தி கலசம் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. அதைதொடர்ந்து, காலை, 7.30 மணிக்கு, ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் ஸ்வாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.