108 திவ்யதேசங்களில், பூவுலகில் காண வேண்டிய 106 திருப்பதிகளை தரிசனம் செய்த பின் விண்ணுலகம் சென்று காண வேண்டியது பரமபதம் மற்றும் திருப்பாற்கடல் ஆகியவை. பரமபதத்தில் பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் இருப்பார். அங்கு இரண்டு துõண்கள் உண்டு. அவற்றைத் தழுவினால் எமலோகம் செல்லாமல், பெருமாளின் அருகிலேயே இருக்கும்படியாக நம்மை மாற்றி விடும் சக்தி அவற்றுக்கு உண்டு. அதே மாதிரியான இரண்டு துõண்கள், பூலோகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலும், தஞ்சாவூர் மாவட்டம் ஆதனுõர் ஆண்டளக்கும் ஐயன் கோவிலிலும் உள்ளன. இவற்றை மணத் துõண்கள் என்பர். இவற்றை தழுவிக் கொண்டால் நரகவேதனை இல்லை என்பது நம்பிக்கை.