Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எப்படி பேசக் கூடாது? மகாராஜா போல மகிழ்ச்சியுடன் வாழ்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை..!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2015
02:10

ஆறு மலைகளைக் கடந்து, ஏழாவது மலையான வேங்கடமலையில் வீற்றிருக்கும் திருப்பதி வெங்கடாஜலபதி அருள்பாலிக்கிறார். புரட்டாசி நான்காம் சனிக்கிழமையான இன்று அந்த மலைகளைப் பற்றி அறிவோமா!

1. வேங்கட மலை: வேம் என்றால் பாவம், கட என்றால் நாசமடைதல். பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு, வேங்கடமலை என்று பெயர். இம்மலையில் வெங்கடாஜலபதியாக (சீனிவாசன்) மகா விஷ்ணு காட்சி தருகிறார்.
2. சேஷ மலை: பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். சேஷன் என்றால் பாம்பு. எனவே இது ஆதிசேஷன் பெயரால் சேஷமலை என்று அழைக்கப்படுகிறது.
3. வேத மலை: வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. இது, வேதமலை ஆகும்.
4. கருட மலை: கருடாழ்வார், வைகுண்டத்தில்இருந்து ஒரு மலையை எடுத்து வந்து இங்கு வைத்தார். இதற்கு, கருடமலை என்று பெயர்.
5. விருஷப மலை: விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். இவனது பெயரில் இங்கு விருஷப மலை உள்ளது.
6. அஞ்சன மலை: ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை, தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க, திருப்பதியிலுள்ள ஆதிவராஹரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஒரு மலை அஞ்சனமலை எனப்படுகிறது.
7. ஆனந்தமலை: ஆதிசேஷனுக்கும், வாயுபகவானுக்கும்  நடந்த போட்டியில், விஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும், ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட மலைக்கு, ஆனந்தமலை என்று பெயர்.இந்த ஏழுமலைகளிலும் ஏறி, வெங்கடாஜலபதியை தரிசித்து வருபவர்களுக்கு மனதில் என்றும் கவலையில்லை. ஏழேழு பிறவிக்கும் பயம் என்பதே இல்லை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar