Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கந்தசஷ்டிக் கவசத்தை எப்போது ... வெறும் பூ போதாதா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாசம் என்பது வேஷம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2015
05:10

பாசம் தான் மனிதனைப் பாடாய்படுத்துகிறது. மகனென்றும், மகளென்றும், மனைவியென்றும், கணவனென்றும், பெற்றோரென்றும் எத்தனை வகையான உறவுகள்...இந்த உறவுகள் பட்டினி கிடந்து விடக்கூடாது. உலகிலுள்ள எல்லா சுகங்களையும் அனுபவித்து விட வேண்டுமென்பதற்காக ஒவ்வொருவனும் படும் கஷ்டமென்ன! செய்கின்ற தகிடுதத்தமென்ன! இந்த பாசத்தையெல்லாம் வென்று விட்டதாகச் சொல்லிக் கொண்ட ஒருவன் ஒரு துறவியைச் சந்தித்தான். துறவியாரே! என் பெயர் ராமன். செவ்வந்தி கிராமத்தைச் சேர்ந்தவன். இந்த உலகில் பாசம் என்பது வேஷம். நானும், என் குடும்பத்தாரும் பாசத்தை துறந்து விட்டோம். நாங்கள் எல்லாரும் இறை இன்பத்தை அடைய விரும்புகிறோம். அதற்கு பாதை காட்டுங்கள், என்றான்.

நீ பாசத்தை விட்டு விட்டதாகச் சொல்வதை எப்படி நம்புவது! இங்கேயே ஒரு வாரம் தங்கியிரு. அதன் பிறகு யோசிக்கலாம், என்றவர், சீடர்களிடம் அவனை ஒப்படைத்து விட்டு, அவனுக்கே தெரியாமல் அவனது கிராமத்துக்குச் சென்றார். அங்கு போய் ராமனின் வீட்டைக் கண்டுபிடித்தார். வாசலில், பணிப்பெண் நின்றாள். அவளிடம் ஒரு ரத்தம் படிந்த துணியைக் காட்டி, அம்மா! இந்த வீட்டில் இருந்த ராமன் காட்டுக்கு வந்தார். அவரைச் சிறுத்தை தாக்கி இறந்து விட்டார். இதோ! அவர் அணிந்திருந்த ஆடை! ரத்தம் படிந்திருக்கிறது,என்றார். அவள் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஐயா! உலகம் என்ற வாடகை வீட்டில் அவர் இத்தனை நாள் குடியிருந்தார். இப்போது உரிமையாளரான இறைவன் அவரைக் காலி செய்யச் சொல்லிவிட்டார். அவரும் கிளம்பிவிட்டார்.  இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா! இதற்காக நான் என் வேலையைப் போட்டுவிட்டு வீட்டுக்குள் போய் தகவல் சொல்ல முடியாது, என்றாள். துறவி ஆச்சரியமாக அவளைப் பார்த்து விட்டு, ராமனின் பெற்றோரிடம் சென்று விஷயத்தைச் சொன்னார்.

ராமனின் தாய் அவரிடம் துறவியாரே! இதெல்லாம் ஒரு விஷயமென எங்களிடம் சொல்ல வந்து விட்டீர்களா! பிறப்பவர் இறப்பது உறுதி தானே! பிறந்த அன்றேஅவனது இறந்ததேதியும் குறிக்கப்பட்டு விட்டது என்பதை நான் ஏற்கனவே அறிவேனே! என்றாள். ஏதோ சத்தம் கேட்டு, ராமனின் மனைவி உள்ளிருந்து வெளியே வந்தாள். விஷயத்தை அறிந்தாள். ஐயா! இந்த வாழ்க்கை வண்டிப்பயணம் போன்றது. அவரவர் இடம் வந்ததும் இறங்கிக் கொள்கிறார்கள். என் கணவர் முந்தைய நிறுத்தத்தில் இறங்கி விட்டார். நான் என் நிறுத்தத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறேன். ஒருவரது இறப்பில் என்ன புதுமை இருக்கிறது! இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமய்யா! என்று சாதாரணமாகச் சொல்லி விட்டுப் போய்விட்டாள். உண்மையிலேயே அவர்கள் பாசத்தைத் துறந்தவர்கள் என்பதைப் புரிந்து கொண்ட துறவி, மீண்டும் தன் இடம் திரும்பினார். ராமனிடம், இளைஞனே! நான் உன் ஊருக்குத் தான் போயிருந்தான். பாவம்! உன் வீட்டில் எதிர்பாராத விதமாக நெருப்பு பற்றி வீடே எரிந்து விட்டது. உன் பெற்றோரும் மனைவியும் ஏதுமில்லாமல் தெருவில் நிற்கிறார்கள். உடனே செல், என்றார். ராமன் சிரித்தான். துறவியே! பொருட்கள் நிலையாத தன்மை கொண்டவையே! வீடு, வாசல், அதிலுள்ள பொருட்கள் அழியக் கூடியவை என் து நிஜம் தானே! மேலும், வாழ்வில் இது ஒரு சம்பவம். மனித வாழ்வில் சம்பவங்கள் தவிர்க்க முடியாதவை, என்றான் மிக அமைதியாக. பந்த பாசத்தைத் துறந்த அந்தக் குடும்பத்தினர் இறையின்பத்தை அடைய தகுதியானவர்கள் என்பதைப் புரிந்து கொண்ட துறவி அவர்களுக்கு மெய்ஞானத்தை  போதித்தார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar