கள்ளக்குறிச்சி: விருகாவூர் சர்க்கரைவிநாயகர் சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரில் உள்ள சர்க்கரை விநாயகர் சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி நான்காவதுசனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
பெருமாள், தாயார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தி, சேவை, சாற்றுமுறை, ஆராதனம் செய்தனர். அலங்கார தீபங்கள் வழிபாடு, மந்திரங்களை வாசித்து உபச்சார பூஜைகள், விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனைகள் நடந்தது. விழா ஏற்பாடுகளைகோவில் அறங்காவலர் முத்துசாமி செய்திருந்தார்.