Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 12 ராசி கற்களுடன் காசி விஸ்வநாதர் ... நினைத்த காரியம் நிறைவேற இது தான் வழி! நினைத்த காரியம் நிறைவேற இது தான் வழி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனத்தில் சினிமா விநாயகர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புவனத்தில் சினிமா விநாயகர்!

பதிவு செய்த நாள்

07 நவ
2015
10:11

திருப்புவனம்: திருப்புவனத்தில் விளைச்சல் பெருகவும், விவசாயம் செழிக்கவும் மக்களால் வைத்து வழிபடப்பட்ட விநாயகர் பெயர் மாறி சினிமா விநாயகர் என அழைக்கப்படுகிறார். திருப்புவனம் நாடார் தெருவை அடுத்து ரயில்வே டிராக்கை தாண்டி 5 அடி உயரத்தில் பிரமாண்டமான விநாயகர் சிலை உள்ளது. இப்பகுதியில் நெல், வாழை, கரும்பு, தென்னை, வெற்றிலை என பல்வேறு விவசாயம் நடக்கிறது. விளைந்த நெல்லை உலர்த்தும் களம் அருகே பொதுமக்களால் 60 ஆண்டுகளுக்கு முன் பிரமாண்டமான விநாயகர் சிலை அமைக்கப் பட்டது.

விளை நிலங்களில் பணி மேற்கொள்ளும் போது விநாயகருக்கு படைத்து அதன் பின் பணிகளை மேற்கொள்வது வழக்கம். முதன் முதலாக மதுரையில் இருந்து மானாமதுரைக்கு மீட்டர்கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்ட போது பணி தடங்கல் இன்றி நடைபெற ரயில்வே ஊழியர்களும் வணங்கி வந்தனர். மற்ற பகுதிகளை காட்டிலும் திருப்புவனத்தில் மீட்டர்கேஜ் பாதை ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது வித்தியாசமானது.

இங்கு சிறைச்சாலை, அம்மன் கோயில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு சினிமா படப் பிடிப்பு நடந்துள்ளது. அப்போது இந்த விநாயகர் சிலை முன்பும் படப்பிடிப்பு நடந்தது. நாளடைவில் இது எல்லா சினிமாக்களிலும் இடம் பெற்றதால், சினிமா பிள்ளையார் என அழைக்க ஆரம்பித்து விட்டனர். விவசாயம் இல்லாத நிலையில் சினிமா ஷூட்டிங்  அதிகளவு நடந்ததால் விநாயகரும் பளிச்சென்று மின்னி வருகிறார். சிறைச்சாலை படத்தில் தான் இந்த விநாயகர் அதிக முறை வருவார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar