பரமக்குடி : பரமக்குடி திரவுபதியம்மன் கோயில் பூக்குழித்திருவிழா, நேற்று கொடியேற்றப்பட்டு துவங்கியது. ஆக., 3ல் அம்மன் திருக்கல்யாணம், அர்ச்சுனன் தபசு, பீமவேசம், சக்கரவாரிக்கோட்டை, அரவான் களப்பலி உள்ளிட்ட விழாக்கள் தொடர்ந்து நடைபெறும். ஆக.,15ல் மாலை 4 மணிக்கு அம்பாள் காளி வேசத்துடன், சபதம் முடித்து, வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெறும்.