ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வசூல் ரூ.41.64 லட்சம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2015 11:11
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 28 நாட்களுக்கு பிறகு நேற்று, உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் கோயில் ஊழியர்கள், பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எண்ணினர். ரூ. 41 லட்சத்து 64 ஆயிரத்து 594 ரொக்க பணம், 34 கிராம் தங்கம், 3 கிலோ 180 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் கக்காரின், மேலாளர் லெட்சுமிமாலா, பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், இளநிலை பொறியாளர் ராமமூர்த்தி பங்கேற்றனர்.