கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி தாயார் கோயிலில் பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். நேற்று அஷ்டமி என்பதால் மாலை 5:30 மணியளவில் சாய ரட்சை பூஜைக்கு பின் பைரவருக்கு 18 வகையான மூலிகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிவப்பு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு வடை மாலையுடன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்தனர்.